சீரான குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் பரிதவிப்பு
மொரப்பூர்:தர்மபுரி
மாவட்டம், மொரப்பூர் அடுத்த கெரகோடஹள்ளி பஞ்.,க்கு உட்பட்ட
சி.தொப்பம்பட்டியில், 350க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்
வசிக்கின்றனர்.
இப்பகுதி மக்களுக்கு ஆழ்துளை கிணறு அமைத்து,
அதிலிருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்-டிக்கு தண்ணீர் கொண்டு
செல்லப்பட்டு, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இங்குள்ள
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்து இடிந்து விழும் நிலையில்
உள்ளது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீர்
வினி-யோகம் செய்யப்படுவதில்லை. மேலும், ஒகேனக்கல் குடிநீரும்
போதுமான அளவிற்கு வழங்கப்படுவதில்லை. இது குறித்த மொரப்பூர்
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், 10க்கும் மேற்-பட்ட முறை மனு அளித்தும்
நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அக்கிராம மக்கள் புகார்
கூறுகின்றனர்.
குடிநீருக்காக பெண்கள் குடங்களை, குழாய்கள் முன்
வைத்து நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். குடிநீர் கிடைக்காமல், அந்த
பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள திறந்தவெளி கிண-றுகளில்
தண்ணீர் எடுத்து வந்து, பயன்படுத்தும் நிலை ஏற்பட்-டுள்ளது. எனவே,
புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்-டவும், குடிநீர் சீராக
வழங்கவும் மாவட்ட நிர்வாகம் நடவ-டிக்கை எடுக்க, கிராம மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
மேலும்
-
காங்.குடன் தொகுதி பங்கீடு முடியும் முன்பே திமுகவினர் வேட்பு மனு தாக்கல்; இது புதுச்சேரி கலாட்டா
-
இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் உளவுத்துறை அமைச்சர் உயிரிழப்பு
-
ராஜேந்திரா ரோட்டில் நெரிசல் நிரந்தரம்
-
அதிகாரிகள் மாற்றம்
-
வாட்ஸ் அப்பில் 'ஹாய்' போதும் காவல்துறை சேவை தேடிவரும்
-
டீ, காபி கூடாது; 11-3 மணி வரை வெளியே செல்ல வேண்டாமே சுகாதாரத்துறையினர் அறிவுரை