மாணவியை கர்ப்பமாக்கிய மேஸ்திரிக்கு 20 'ஆண்டு'

கிருஷ்ணகிரி:ஆசை வார்த்தை கூறி, பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய கட்-டட மேஸ்திரிக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து, கிருஷ்-ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டது.


கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த வண்ணாத்திப்-பட்டியை சேர்ந்தவர் மாதப்பன், 33, கட்டட மேஸ்திரி. இவர், அருகிலுள்ள ஒரு கிராமத்திற்கு கடந்த, 2020ல் வீடு கட்ட சென்-றுள்ளார். அப்போது, அந்த வீட்டிலிருந்த பிளஸ் 1 மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பழகி, வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் மாணவி கர்ப்பமானார். இது குறித்து மாணவி கடந்த, 2021, ஜூலை, 16ல் தேன்கனிக்-கோட்டை அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகார் படி, மாதப்பனை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர்.


இந்த வழக்கு, கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் கடந்த, 5 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்ப-ளிக்கப்பட்டது. நீதிபதி சுதா தன் தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட மாதப்பனுக்கு போக்சோ வழக்கில், 10 ஆண்டுகள், மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், 10 ஆண்டுகள் என மொத்தம், 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, உத்தர-விட்டார். அரசு தரப்பில் வக்கீல் உமாதேவி மங்களமேரி ஆஜ-ரானார்.

Advertisement