எல்.பி.ஜி.,க்கு மாற்றாக டி.எம்.இ., காஸ் தொழில்நுட்பம்

6


கோவை: எல்.பி.ஜி.,க்கு மாற்றாக, மெத்தனாலில் இருந்து டைமெத்தில் ஈதர் (டி.எம்.இ.,) உருவாக்கும் தொழில்நுட்பம் இருக்கிறது; காஸ் தட்டுப்பாடு போன்ற சூழல்களில் இத்தகைய மாற்று எரிபொருளை பயன்படுத்துவது பற்றியும் பரிசீலிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.


எல்.பி.ஜி., சமையல் எரிவாயுவாகவும், வாகன எரிபொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. எல்.பி.ஜி., ஒரு ஹைட்ரோகார்பன். இதனை நிலத்தடியில் இருந்து எடுக்க கடும் எதிர்ப்பு நிலவுகிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும்போது, அன்னிய செலாவணி ஏராளமாக செலவிட நேர்கிறது. இதற்கு பதிலாக, மெத்தனாலில் இருந்து டைமெத்தில் ஈதரை (டி.எம்.இ.,) தயாரிக்கும் தொழில்நுட்பம் இருக்கிறது.


இது குறித்து புனே தேசிய வேதியியல் ஆய்வக விஞ்ஞானிகள் கூறியதாவது: வேளாண் விளைபொருளில் இருந்து மெத்தனால் தயாரிக்கப்படுகிறது. மெத்தனாலில் இருந்து டி.எம்.இ., தயாரிக்கும் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த டைமெத்தில் ஈதர், எல்.பி.ஜி.,யை விட துாய்மையான எரிபொருள். இந்திய தர நிர்ணயத்தின்படி, எல்.பி.ஜி.,யுடன் 20 சதவீதம் வரை டைமெத்தில் ஈதரை கலந்து பயன்படுத்தலாம்.


இதற்கு, தற்போது பயன்பாட்டில் உள்ள எல்.பி.ஜி., சிலிண்டர், பர்னரே போதுமானது. தனியாக, 100 சதவீதம் டைமெத்தில் ஈதரை எரிபொருளாகவும் பயன்படுத்த முடியும். டி.எம்.இ.,யை சமையல் காஸ் வாகன எரிபொருள் மற்றும் தொழிற்சாலைகளுக்கும் பயன்படுத்த முடியும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

@block_G@

டைமெத்தில் ஈதர் - எல்.பி.ஜி., விலை ஒப்பீடு

வீட்டு உபயோக சமையல் காஸ் நமக்கு மானியத்தில் வருகிறது. வர்த்தக எல்.பி.ஜி., யின் விலை சராசரியாக கிலோ 93 ரூபாய். அதேசமயம், டி.எம்.இ., உற்பத்தி விலை கிலோ 60 ரூபாய் மட்டுமே. 'வீட்டு உபயோக சிலிண்டரில் 8 சதவீதம், டி.எம்.இ., எனும், டைமெத்தில் ஈதர் கலப்பதாக இருந்தால், காஸ் விலை, கிலோவுக்கு 4 ரூபாய் வரை குறையும்' என, புனே தேசிய வேதியியல் ஆய்வக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.block_G

Advertisement