உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலை மீது தாக்குதல்; ஈரான் மீது டிரம்ப் ஆத்திரம்
வாஷிங்டன்: மேற்கு ஆசியாவில் தொடரும் போருக்கு மத்தியில், ஈரான் கத்தார் மீது புதிய தாக்குதல்களைத் தொடுத்தால் அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலை மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ராஸ் லபானில் ஏற்பட்ட மூன்று தீ விபத்துகளில் இரண்டு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக கத்தார் தெரிவித்துள்ளது. யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் கத்தார் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஈரான் கத்தார் மீது புதிய தாக்குதல்களைத் தொடுத்தால் அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என்று அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். இது குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஈரானுக்கு ஏற்படக்கூடிய நீண்டகால விளைவுகள் காரணமாக தீவிர ராணுவ நடவடிக்கைக்கு அங்கீகாரம் அளிக்க விரும்பவில்லை.
ஈரான் கத்தார் மீது புதிய தாக்குதல்களைத் தொடுத்தால் அமெரிக்கா பதிலடி கொடுக்கும். கத்தாரின் எல்பிஜி ஆலை மீண்டும் குறிவைக்கப்பட்டால், அவ்வாறு செய்ய தயங்க மாட்டேன். ஈரானின் சவுத் பார்ஸ் எரிவாயு கிடங்கு மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
தடைகள் தளர்வு
உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதிக்கான முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியின் மீதான கட்டுப்பாட்டை ஈரான் அதிகரித்துள்ளதால், கச்சா எண்ணெய் விலைகள் 5 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய் 108 டாலருக்கும் அதிகமாக உயர்ந்தன. மோதல் தொடங்கியதிலிருந்து கச்சா எண்ணெய் விலைகள் 50 சதவீதம் உயர்ந்துள்ளன. எண்ணெய் நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், வெனிசுலா மீதான தடைகளை அமெரிக்கா தளர்த்தியுள்ளது.
IT is not LPG..It is LNG...Newspapers doesnt understand simple fact...
LPG produced in refineries with Crude oil..LNG is Natural gas liquified for trasport..
Dont panic..Please refer chatgpt/gemini to understand..Dont spread panic
கையையும் காலையும் வச்சுக்கிட்டு சும்மா இல்லாம, எல்லாத்தையும் கிளப்பி விட்டுட்டு இப்போ ஆத்திரம் அது இதுன்னா என்னய்யா அர்த்தம். வல்லவனுக்கு வல்லவன் உலகில் உண்டு ட்ரும்பு . நினைவுகொள். நீ அவதி படறது போதாதுன்னு உலகத்துல இருக்கிற அத்தனை பேரையும் கஷ்ட படுத்துற. இந்த பாவம் உன்னை சும்மா விடாது.
அமெரிக்காவுக்கு வேறு வேலையில்லை, ஈரானுக்கு வேறு வலி தெரியவில்லை போல..
Exactly
அமெரிக்கா பென்டகன் மீது ஏவுகணை வீச வேண்டும் அப்பொழுதுதான் அவனுண்டு அவன் வேலை உண்டு என்று அமெரிக்கா இருக்கும்.
எவ்வளவு என்னை வளம் மிக்க நாடு ஈரான்? மற்ற நாடுகளிடம் கை ஏந்தும் நிலை ஏன்?
பாகிஸ்தான் நல்ல செழுமையான நிலா பரப்பை கொண்ட புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் உள்ளது இருந்தும் மற்ற நாடுகளிடம் பிச்சை தான்... அதே தான் வட கொரியாவும். என்ன இல்லை.
ஒரு ஒற்றுமை மட்டும் உள்ளது இந்த நாடுகள் எல்லாம் வன்மத்தை பொழியும் நாடுகள். ஈரானுக்கு இஸ்ரேல் நாட்டை ஒழிக்கணும். பாக்கிகளை பாரதத்தை துண்டாடணும். வட கொரியாவுக்கு தென் கொரியாவை ஒழிக்கணும்... இது போல் வன்மமும் வெறுப்பும் உள்ள நாடுகள் உறுப்புட்டதா சரித்திரம் இல்லை.
150 வருஷங்களுக்கு முன்னர் மலேஷியா இந்தோனேஷியா ப்ருனெய் எத்தியோப்பியா லெபனான் போன்ற நாடுகள் இஸ்லாமிய நாடுகளாக இல்லை.
பிரிட்டன் பிரான்ஸ் அமெரிக்காவில் இஸ்லாம் கால் வைத்த கடந்த 75 வருஷங்களில், அந்த நாட்டு ஆட்சியில் ஏதோ ஒரு வகையில் பங்கு கொள்ளும் படி வளர்ந்துள்ளது காரணம் மக்கள் தொகையில் கவனிக்கப்படும் அளவு வளர்ந்துள்ளது
இரான் மற்றும் மெக்கா மதீனா பகுதி எகிப்து அனைத்தும் புராதன ஷிவ ஆலயம் சூழ்ந்து இருந்துள்ளது வன்முறையில்லாத மதம் எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளலாம். ஈரான் சிரியா ஏமன் போன்ற நாடுகள் மனித சமுதாயத்திற்கு நன்மை செய்வதாக தோன்றவில்லை எப்படி இருந்தாலும் சண்டையின் போக்கை பாப்போம்
உண் உதாருகளெல்லாமால் பயந்த பாடியில்லை ஈரான். முழுக்க நனைத்த பின் முக்காடு எதுக்குன்னு இருக்காங்க. யுஏஇ எல்லோரும் ஒற்றுமையாய் இருந்து உன் ராணுவ உதவி எங்களுக்கு ஹீஆவியில்லையய என்று விரட்ட வேண்டும் . அடுத்து ஈரானும் தாக்குதலை நிறுத்தி விடும். இப்பூர் மட்டுமேன்னா அமெரிக்கன் ஆயில் விரல் சூப்பிக்கிட்டிருக்கான். எங்கெ வந்தான் காப்பற்றா? வாய் சவடால் தான். உங்க்க முன்னேஆற்றம் 30 ஆண்டுகள் பின்நோக்கி சென்று விட்டது. ஒண்ணாம்நம்பர் போக்கிரி ராவுளு போல.
அமெரிக்கன் ஆத்திரம். உன் திமிர். சம்மந்தமில்லாமல் உன் சட்டாம்பிள்ளை தனத்தை காட்ட காலை விட்டாய். உனக்கும் மத்திய கிழக்கிற்கும் என்ன சம்பந்தம். வட கொரியாவை கொம்பு சீவி விட்டால் தான் நீ அடங்குவாய். அவன் நிச்சயம் உன்னை அடக்குவான். இந்த போரில் மதிய கிழக்கு நாடுகள் ஒன்று பட வேண்டும். அமெரிக்கன் அவன் நாட்டில் வைத்து அடக்க வேண்டும். வாலை நீட்ட அனுமதிக்க கூடாது. எல்லா நாட்டிற்கு இந்த சண்டையால் இழப்பு.
டிரம்ப் தேனீ கூட்டை கலைத்து விட்டார். கடிக்காமல் விடாது.மேலும்
-
ரூ.1.84 லட்சம் கோடி வேணும் கேட்கிறது அமெரிக்க ராணுவம்
-
100 கிலோ கஞ்சா பறிமுதல் :குற்றவாளி கேரளா ஓட்டம்
-
போலீஸ் டைரி: பீஹார் சிறுவன் தற்கொலை
-
கே.எம்.சி. சட்ட கல்லுாரியில் கல்வி பண்பாட்டு விழா
-
மனைவியை கொன்று தற்கொலை ஏன்? வீடியோ வெளியிட்டு கணவன் உருக்கம்
-
தேர்தல் அதிகாரிக்கு தெரிவிக்காமல் வேட்பாளர் சொத்து விற்க முடியாது