தங்கம் விலை இன்று மேலும் ரூ.3,200 குறைவு; ஒரே நாளில் ரூ.5,360 சரிவு
சென்னை: சென்னையில் இன்று காலை (மார்ச்19) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2,160 ரூபாய் குறைந்த நிலையில், மாலையில் ரூ.3,200 சரிந்துள்ளது. இதன்மூலம், ஒரே நாளில் ரூ.5,360 குறைந்திருப்பது வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளி கிராமுக்கு நான்கு ரூபாய் குறைந்து, 276 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கிலோவுக்கு, 4,000 ரூபாய் சரிவடைந்து, 2.76 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று முன்தினம் (மார்ச் 17) ஆபரண தங்கம் கிராம், 14,650 ரூபாய்க்கும், சவரன், 1,17,200 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 280 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்றைய நிலவரம்
நேற்று (மார்ச் 18), தங்கம் விலை கிராமுக்கு, 80 ரூபாய் குறைந்து, 14,570 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 640 ரூபாய் சரிவ டைந்து, 1,16,560 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு ஐந்து ரூபாய் குறைந்து, 275 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 5,000 ரூபாய் சரிவடைந்து, 2.75 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இன்றைய நிலவரம்
இன்று (மார்ச்19) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2,160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு 270 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 14,300 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
இந்நிலையில், மாலையிலும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3200 குறைந்துள்ளது. இதனால், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,11,200க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.400 குறைந்து ரூ.13,900க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 4 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 6,880 ரூபாய் குறைந்துள்ளது.
வெள்ளியும் சரிவு
வெள்ளி விலையும் இன்று சரிந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 265 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் சரிந்து ஒரு கிலோ 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாலையில் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.
நல்ல உத்தரவு.. வரவேற்கிறேன்மேலும்
-
சென்னை சுங்கத்துறை அணி சீனியர் கால்பந்தில் வெற்றி
-
டிவிஷன் வாலிபால் லீக் ஐ.ஓ.பி., - ஐ.சி.எப்., வெற்றி
-
செங்கையில் பிரசார கூட்டம் நடத்த இடங்கள் அறிவிப்பு
-
செய்யூர் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் மையம் ஏற்படுத்த நோயாளிகள் வலியுறுத்தல்
-
தேர்தல் பணியில் ஈடுபட முன்னாள் வீரர்களுக்கு அழைப்பு
-
இன்று இனிதாக