சிட்டி கிரைம் செய்திகள்
8 கிலோ கஞ்சா பறிமுதல் கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு மும்பையில் இருந்து கோவை எக்ஸ்பிரஸ் வந்தது. இந்த ரயிலின் முன்பதிவற்ற பெட்டியில், மூட்டை ஒன்று கேட்பாரற்று கிடந்தது. கைப்பற்றிய போலீசார் சோதனையிட்டனர். அதில் 8.200 கிலோ கஞ்சா இருந்தது. யாரும் உரிமை கோரவில்லை. கஞ்சாவை பறிமுதல் செய்த மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், கடத்தலில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.
வீடு புகுந்து நகை பறிப்பு கவுண்டம்பாளையம் மீனாட்சி நகரை சேர்ந்தவர் ராஜகோபால். இவரது, தாயார் மாரியம்மாள், 103. வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது மர்மநபர் பட்டபகலில் வீடு புகுந்து கழுத்தில் அணிந்து இருந்த, ஐந்து பவுன் நகையை பறித்து தப்பினார். கவுண்டம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
பைக் திருட்டு; வாலிபர் கைது வடவள்ளி சத்யமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் உதயா, 20. வீட்டில் தனது பைக்கை நிறுத்தி விட்டு துாங்கச் சென்றார். மறுநாள் காலை பைக் மாயமாகியிருந்தது. வடவள்ளி போலீசார் விசாரணையில் பைக்கை திருடியது, பீளமேட்டைச் சேர்ந்த ஹரிஹரன், 18 எனத் தெரிந்தது. அவரை கைது செய்தனர்.
மேலும்
-
உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலை மீது தாக்குதல்; ஈரான் மீது டிரம்ப் ஆத்திரம்
-
இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1,705 புள்ளிகள் வீழ்ச்சி
-
தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,160 சரிவு; 4 நாட்களில் ரூ.3,680 குறைவு
-
வளைகுடா நாடுகளின் மீதான தாக்குதல்களை நிறுத்துங்கள்; ஈரானுக்கு சவுதி அரேபியா எச்சரிக்கை
-
எல்.பி.ஜி.,க்கு மாற்றாக டி.எம்.இ., காஸ் தொழில்நுட்பம்
-
சீமைக்கருவேல மரங்களை அகற்ற நீதிபதிகள் தலைமையில் குழு; உயர்நீதிமன்றம் உத்தரவு