அதிகார மமதையில் மக்களுக்கு நிகழும் கொடுமைகள்: கமல் காட்டம்
சென்னை: அதிகார மமதையில் அப்பாவி மக்களுக்கு எதிராக நிகழும் கொடுமைகள் ஒழிக்கப்பட வேண்டும் என நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: சாத்தான்குளத்தில் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. சட்டத்தை அறிந்தவர்கள், பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்புக் கொண்டவர்கள் சிறிதளவும் ஈவிரக்கமின்றிச் செய்த கொடுமைகளை அறிகையில் நெஞ்சம் பதைக்கிறது.
நாட்டையே அதிரச் செய்த இந்த அநீதிக்கு எதிராக, விடாமல் போராடிய ஜெயராஜ் பென்னிக்ஸ் குடும்பத்தார், சாத்தான்குளம் ஊர்ப் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், ஆதாரங்களுடன் குற்றத்தை நிரூபித்த சிபிஐ விசாரணை அதிகாரிகள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
@quote@தனிப்பட்ட முறையில் நான் மரண தண்டனைக்கு எதிரானவன். கொடுங்குற்றம் இழைத்தவர்கள் எவ்வித சலுகையுமின்றி ஆயுட்காலம் உள்ளவரை கடும் உழைப்புடன் சிறை வைக்கப்பட வேண்டுமென்பதே என் நிலைப்பாடு. quote
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 9 பேரின் குடும்பங்களை எண்ணிப்பார்க்கிறேன். மனிதத்தன்மையற்ற காரியத்தில் ஈடுபட்டு, ஒரு பாவமும் அறியாத தங்களது குடும்பத்தாருக்கு எவ்வளவு பெரிய தண்டனையைக் கொடுத்திருக்கிறார்கள்?
மனசாட்சி
போலீசாரின் கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாகி படுகாயமடைந்தவர்களைப் பார்க்காமலே சான்றிதழ் அளித்த மருத்துவர், ரிமாண்ட் செய்ய உத்தரவிட்டவர், உண்மைகளை மறைக்க முயன்ற அதிகாரிகள், இருவரும் மூச்சுத் திணறலால் இறந்தார்களென மனசாட்சி இல்லாமல் பேசிய ஆட்சியாளர்கள் ஆகியோருக்கும் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று என் மனம் ஏங்குகிறது.
அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கிறோம், நம்மை யார் என்ன செய்துவிட முடியும் எனும் துணிச்சலில் குற்றமிழைப்பவர்கள் எவராயினும், அவர் எத்தகைய செல்வாக்கு படைத்தவரெனினும் சட்டத்தால் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அதிகார மமதையில் அப்பாவி மக்களுக்கு எதிராக நிகழும் கொடுமைகள் ஒழிக்கப்பட வேண்டும். இவ்வாறு கமல் கூறியுள்ளார்.
உங்கள் துறையில் நடக்கும் அநீதிகளையும், பாலியல் சீண்டல்களையும் என்றாவது கண்டித்துள்ளீர்களா? அல்லது உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நேர்மையாக நடந்துள்ளீர்களா? இல்லையெனில் சென்று ஓரமாக அமருங்கள்.
படம் ஸீரியஸா போகும் போது எல்லாரும் அடுத்து அடுத்து என்ன நடக்கும்னு உறைந்து போயிருப்பார்கள். எல்லாருடைய மனசும் இறுகி போய் இருக்கும். அந்த சமயத்தில் கே ஏ தங்கவேலு தோன்றி நகைச்சுவையால் எல்லாரையும் கலகலப்பாக்கி விடுவார் மனுஷன். அந்த தங்கவேலு இப்ப தம்மிடையே இல்லை. ஆனால் அந்த குறையை தீர்க்க இந்த மநீம ஓனர் இருக்கார். ஆனால் இவரு பேசுனா கொஞ்சம் கூட சிரிப்பு வரலை. அவுரு பேசுற நாலாவது மொழி என்னான்னே நமக்கு தெரிய மாட்டேங்குது.
பார்த்து பேசுங்க ஆண்டவரே. தற்போதய ஆட்சியில் 2022 ம் வருடத்தில் விக்னேஷ் என்பவரை காவல் துறை அடித்து கொன்றபோது, உங்களுக்கு ஆணைகள் கொடுக்கும் தீயசக்தி கழகத்தலைவர் அவர் உடல் நிலை சரியில்லாமல் இறந்தார் என்று சட்டசபையிலேயே பொய் சொன்னார். பின்னர் விவரங்கள் வெளிவந்தவுடன் சிபிசிஐடிக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டார். உங்களுக்குதான் செலக்ட்டிவ் அம்னீசியாவாயிற்றே, மறந்து போயிருக்கும். உங்க முதலாளி தன்னைத்தான் சொல்லிவிட்டீர்கள் என்று நினைத்துக்கொள்ளப்போகிறார். ராஜ்யசபா உறுப்பினராக தொடரக்கூடாது என்று சொல்லிவிடப்போகிறார்.
நாட்டில் நடக்கும் அநியாயங்களை தட்டிக்கேட்க தூக்கத்திலிருந்து எழுந்த கமல் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இந்த திராவிட புத்திரனை இதற்குமேல் எதுவும் கேட்கப்போவது இல்லை.
சமீபத்திய நிகழ்வுகள் கண்ணுக்கு தெரியாதா இல்லை உறைக்காதா?
மக்களே இலவசங்களை பார்த்து ஏமாறாதீர்கள். திராவிட கட்சிகள் மற்றும் திராவிட சித்தாந்தங்களை முழுமையாக விட்டொழித்து, புதிய சிந்தனை மற்றும் புதிய விதிமுறைகள் வந்தால் மட்டுமே இனிமேல் தமிழகத்தையும், பெண்களையும், குழந்தைகளையும் நல்லமுறையில் காப்பாற்றமுடியும். இல்லை என்றாலும் அரசுஎனும் குதிரை ஓடும், ஒரே இடத்தில சுத்தி சுத்தி வட்டமாகவே ஓடும். ஆனால் முன்னோக்கி ஓடாது. அதனையே கணக்குக்காட்டி ஏமாற்றிக்கொண்டிருப்பார்கள்.
Kamal Sir, have you returned that Rs 3 crore rupees to those 60 people who wanted to con elections from your party? It is not fair on your part to collect amount under one account head and later retain them under another account head without the consent of those who gave you money. Please understand and save your name.
தொண்டர்களிடம் தேர்தலில் நிற்பதற்கான விண்ணப்ப கட்டணம் 50000 ருபாய் எப்போது திருப்பி தருவீர்கள்?
தகுதி அன்று சுயல தற்குறி எல்லாம் பேசக்கூடாது.
திமுக ஆட்சியில நடந்த கொடுமை யை பற்றியெல்லாம் பேச மாட்டார் மனம் பதைக்காது அப்பெல்லாம் தூங்கிடுவார் ஆண்டவர்