லாரி மோதி ஒருவர் பலி
புதுச்சத்திரம்:சேலம்,
சர்க்கார் கொல்லப்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன், 58. இவர் அதே
பகுதியில் உள்ள ஒரு தனியார் லெதர் கம்பெ-னியில் மேலாளராக வேலை செய்து
வந்தார்.
இவருக்கு சுமதி, 51, என்ற மனைவியும், நந்தகுமார் என்ற மகனும்
உள்ளனர். நேற்று மாரியப்பன் தனது குலதெய்வ கோவிலுக்கு செல்ல
டூவீ-லரில், நாமக்கல்லில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டி-ருந்தார்.
நேற்று காலை, 11:30 மணி அளவில் நாமக்கல்-சேலம் சாலையில் களங்காணி
மேம்பாலம் அருகே அவர் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால்அதிவேகமாகவும்,
கவனக்குறைவாகவும் வந்த அசோக் லேலண்ட் தோஸ்த் வாகனம், மாரியப்பனின்
டூவீலர் மீது மோதியது. இந்த விபத்தில் மாரியப்பன் பலியானார்.
புதுச்சத்-திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement