தேர்தல் கமிஷனர் நியமன வழக்கு: தலைமை நீதிபதி விலகல்
புதுடில்லி: தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் இருந்து தலைமை நீதிபதி சூர்யகாந்த் விலகி கொள்வதாக அறிவித்துள்ளார்.
கடந்த 2023ம் ஆண்டு தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்களை நியமிக்க, பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் மற்றும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது.
ஆனால், அதே ஆண்டு மத்திய அரசு சட்டம் ஒன்றை கொண்டு வந்தது. அதன்படி தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பான குழுவில் பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் மற்றும் பிரதமர் நியமனம் செய்யும் மத்திய அமைச்சர் இடம்பெறுவார் என அதில் கூறப்பட்டது.
தேர்வு குழுவில் தலைமை நீதிபதி நீக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சூர்யகாந்த், ஜாய்மால்யா பக்ஷி மற்றும் விபுல் எம் பஞ்சோலி அமர்வு முன்பு இன்று மார்ச் 20ம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது தலைமை நீதிபதி கூறுகையில், இந்த வழக்கை நான் விசாரிக்க வேண்டுமா? அதில் ஒரு முடிவை எடுக்கும் போது தனக்கு சுயநலன் இருக்கும் என சிலர் குற்றம்சாட்டுவார்கள் என தெரிவித்தார்.
அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கூறுகையில், அப்படி யாரும் உங்களை குற்றம்சாட்ட மாட்டார்கள் என தெரிவித்த அவர், இந்த வழக்கு விசாரணையில் விலகிக் கொள்வது சிறந்த முடிவாக இருக்கும் என யோசனை தெரிவித்தார்.
இதனையடுத்து, சூர்யகாந்த் கூறுகையில், இந்த மனுக்கள் அனைத்தும் தலைமை நீதிபதி ஆகும் நிலையில் இல்லாதவர்கள் அமர்வு முன்பு பட்டியலிடப்படும்' என்றார். மேலும் ஏப்., 7 ம் தேதிக்கு முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்படும் என தெரிவித்தார்.
Government has all the authority to form a committe to appoint CEC
The job of court is to only settle disputes that arise in the functioning of Election commission ,
விலகுவது அவரது விருப்பம். ஆனால் குழுவை அமைப்பது அரசின் உரிமை.யார் யார் என்பதை உச்சநீதிமன்றம் நிர்ணயிக்க முடியாது.ஒருவேளை உ.நீ.மன்ற த.நீ. உள்ள குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டால் விசாரணை குழுவில் த.நீ. இருக்கமுடியாது. தீர்ப்பில் த.தே.அ. தேர்ந்து எடுக்கப்பட்டது செல்லாது என தீர்ப்பானால் த. நீ. நிலை என்னவாகும்? ஆகவே அரசு செய்தது சரியான முடிவு.
தேர்தல் ஆணையம், கவர்னர் போன்ற அரசியல் சாசன பதவி நியமனத்தில் எப்போதும் எந்த நீதிபதியும் நியமிக்க கூடாது. நீதிபதிகள் பணி தீர்வு காண்பது மட்டும். அரசியல் வழக்கறிஞர்கள் எந்த கட்டுப்பாடும் இல்லாத நிலையில், நீதிமன்றத்தை சந்தை ஆக்கி வருகின்றனர். மம்தா வழக்கு நீதியை நிலை குலைய செய்யும் வழக்கு. நிர்வாக வன்முறை கொண்ட எந்த நபரும் சட்டத்தில் இருந்து விடுதலை கூடாது. அரசியல் சாயம் பூசி மூர்க்கத்தனமாக வழக்கறிஞர்கள் வாதிட்டு வருகின்றனர். அவர்கள் மம்தாவுடன் சேர்த்து சிறை படுத்த தகுதியானவர்கள். மக்கள் அதிக வரி பணம் சூறையாட அனுமதி கூடாது. கொலிஜியம் அடியோடு நீக்க வேண்டும். புகார் பெற்று, விசாரணை அமைப்புகள் பார் கவுன்சில், நீதிமன்றம் உள் சென்று விசாரிக்க வேண்டும். அரசியல் சாசனத்தில் விலக்கு ஒன்றும் இல்லை. ஆட்சியை பாதுகாக்க பிஜேபி பயந்து நடவடிக்கை எடுக்க தயங்குகிறது.?
பேசாம ஏ.ஐ நீதிபதியை நியமிக்கலாம். பாரபட்சமில்லாமல் தீர்ப்பு சொல்லும்
அருமை அருமை. இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளை மிகவும் நேர்மையாக தேர்வு செய்யுங்கள். தகுதிவாய்ந்த நீதிபதிகளை தேர்வு செய்யுங்கள். நீதிபதிகளில் சிலர் நேர்மையற்றவர்களாக உள்ளனர்.