தேர்தலில் எப்படி ஓட்டு போடணும்! கல்லுாரியில் மாதிரி ஓட்டுப்பதிவு
வால்பாறை: வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லுாரியில், மாதிரி ஓட்டுப்பதிவு மையத்தின் வாயிலாக ஓட்டு போடுவது எப்படி என, விளக்கமளிக்கப்பட்டது.
வால்பாறை சட்ட சபை தொகுதியில், 250 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு, போதிய அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தேர்தலில் ஓட்டு பதிவு செய்யவது எப்படி என்பது குறித்து, கல்லுாரி மாணவர்களிடையே மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லுாரியில் நடந்த மாதிரி ஓட்டுப்பதிவு நிகழ்ச்சியை முதல்வர் கோபி துவக்கி வைத்தார். வால்பாறை சட்டசபை தொகுதி தேர்தல் மண்டல அலுவலர் ரமேஷ், வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாதிரி ஓட்டுப்பதிவு முகாமில் மாணவர்கள் வரிசையில் நின்று, தங்களது ஓட்டு போட்டனர்.
தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'கல்லுாரியில் படிக்கும் மாணவர்கள் முதன் முறையாக ஓட்டு போட ஓட்டுச்சாவடிக்கு செல்ல உள்ளனர். அதனால், ஓட்டு போடும் வழிமுறை குறித்து, விளக்கும் வகையில் கல்லுாரி வளாகத்தில் மாதிரி ஓட்டுப்பதிவு மையம் அமைக்கப்பட்டது. அதன்பின், ஓட்டுப்பதிவு செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும், தேர்தலில் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்தும், மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது,' என்றனர்.
மேலும்
-
மேற்காசிய போர் பதற்றம்; இலங்கையில் 2 வாரங்களில் 2வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு
-
ஈரானும் வாழட்டும்; ஊரானும் வாழட்டும்: 'வழவழ' அறிக்கை வெளியிட்டார் கமல்
-
திமுக கூட்டணிக்கு மேலும் நெருக்கடி; வெளியேறியது தவாக!
-
தொடர் தாக்குதல் எதிரொலி: 24 மணி நேரத்தில் ஈரான் தூதரக ஊழியர்கள் வெளியேற சவுதி உத்தரவு
-
அமெரிக்காவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயார்; கியூபா அதிபர் அறிவிப்பு
-
எல்பிஜி லோடு ஏற்றிய மேலும் ஒரு சரக்கு கப்பல் இந்தியா வந்தது