திராவிட மாடலை பின்பற்றினால் இந்தியா இன்னும் விரைவாக வளரும்: முதல்வர் ஸ்டாலின்
சென்னை: தமிழகத்தின் திராவிட மாடல், நாடு முழுவதும் பின்பற்றப்பட்டால், இந்தியா இன்னும் விரைவாக வளர்வது உறுதி என்று முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.
உத்தரப்பிரதேச திட்டக்குழு அதிகாரிகள், மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைக்க தீர்வு காணும் வகையில் தமிழகம் வந்துள்ளனர். தமிழகத்தில் செயல்பாட்டில் உள்ள திட்டங்கள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அவர்கள் விரிவான ஆலோசனை நடத்தினர்.
இந்த விவரத்தை தமது எக்ஸ் வலை தள பதிவில் குறிப்பிட்டு, முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது;
ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்ளும் இந்த ஆரோக்கியமான போக்கு மென்மேலும் வளர வேண்டும் என விழைகிறேன். தமிழ்நாட்டுக்கு வந்துள்ள விருந்தினர்களை நம் மக்களின் சார்பாக அன்போடு வரவேற்கிறேன்.
மகப்பேறு இறப்பு விகிதம் குறைப்பதில் மட்டுமல்ல; மாநில சுயாட்சி, மொழிக்கொள்கை, சமூக நீதி ஆகியவற்றிலும் தமிழகத்தின் திராவிட மாடல், நாடு முழுவதும் பின்பற்றப்பட்டால் இந்தியா இன்னும் விரைவாக வளர்வது உறுதி.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.
2003 முதல் 2013 வரை எத்தனை ஆணிகளை புடுங்கினீர்கள் என்பதை கூறினால் தமிழ் மக்கள் ஓட்டு போட வேட்டு வைக்க சரியாக இருக்கும்
வருசத்துக்கு 30000 கோடி சம்பாதிக்கறது சாதாரண விஷயமா. அந்த சாதனை மற்ற மாநிலங்களிலும் பரவ வேண்டாமா.
எல்லா மாநிலமும் சுயாட்சி கேட்க வேண்டும் மேலும் வாக்குக்கு பணம் கொடுக்க வேண்டும் , இலவசங்களை அள்ளி அள்ளி கொடுக்க வேண்டும் , கொத்தடிமைகளை நிரந்தரமாக உருவாக்க வேண்டும் , எப்பேர்ப்பட்ட நல்ல உள்ளம் கொண்ட திராவிட மாடல் முத்துவேல் கருணாநிதி மகன்
எந்தெந்த துறையில் வளரும் என்பதையும் சொல்ல வேண்டும். ஏனெனில் பல எதிர்மறை வளர்ச்சிகள் இருக்கின்றனவே.
வெட்டி பேச்சு . வெஸ்ட் . தமிழ்நாட்டை மதுவால் சீரரழித்த மாடல் இந்தியாவுக்கு வேண்டாம்
திராவிட மாடல் பின்பற்றினால் விரைவில் போதை நாடாக வளரும்
இது மோடிக்கே ஸ்டிக்கர் ஒட்டும் வேலை. அவுரு தொடரந்து உழைத்து கொண்டே இருக்கார். அதுல விளைவதை இவுரு பங்கு போட்டுக் கொள்ள பண்ற திருட்டு வேலை இது. நோகாம நுங்கு சாப்புடுறதுங்குறது இதுதான். நமக்கு இன்னும் 4 வாரம் ஓட்டணுமே. இப்பவே தலை சுத்துது.
இப்ப ஹை ஸ்கூல் ல இருக்கற போதை பழக்கம் எலிமென்டரி ஸ்கூல் க்கும் வேகமா பரவும் . திராவிட மாடல் ன்னா சும்மாவா
திராவிட மாடல் திராவிட மாடல் என்று கூறி தமிழகத்தை அழித்தது போதாதுபோல. அதே திராவிட மாடலை பயன்படுத்தி ஒட்டுமொத்த இந்தியாவையே அழிக்க முட்படுகிறார் முதல்வர்.மேலும்
-
பாலியல் வழக்கில் தண்டனை பெற்றவர் மனைவிக்கு தி.மு.க.,வில் 'சீட்' தர எதிர்ப்பு
-
ரூ.1.63 லட்சம் பறிமுதல்
-
தொடர் தோல்வி தொகுதிக்கு 33 பேர் மனு நேர்காணல் சென்றவர்களை கலாய்த்த முதல்வர்
-
அனுமதியற்ற மது விற்பனை தாராளம் தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டிலும் கரை வேட்டியினர் ஆதிக்கம்
-
பூசாரிகள் உத்தரவிட்டதால் மீண்டும் போட்டியிடுவேன்!
-
ஆடுகள் திருட்டால் பரிதவிக்கும் மக்கள்