விளாத்திகுளம் மாணவி வழக்கில் தர்ம முனீஸ்வரன் தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்; ஏப்ரல் 2 வரை காவல்
தூத்துக்குடி: விளாத்திகுளம் பள்ளி மாணவி பாலியல் படுகொலை வழக்கில் கைதான தர்ம முனீஸ்வரனை ஏப். 2 வரை சிறையில் அடைக்குமாறு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த செயலை செய்த நபரை கைது செய்யும் வரை சடலத்தை வாங்க மாட்டோம் என்று கூறி மாணவியின் பெற்றோர், உறவினர்கள் தொடர் போராட்டத்தில் இறங்கினர்.
குற்றவாளியை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டது. பலநாள் தொடர்ந்து இந்த விசாரணையின் முடிவில் 5 பேரை சந்தேக வளையத்திற்குள் கொண்டு வந்த போலீசார், அவர்களின் டிஎன்ஏ மாதிரிகளை பெற்று பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர் விசாரணையில் சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் (35) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இவர் மீது மூதாட்டியை பலாத்காரம் செய்து நகையை பறித்த வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளிவந்ததும் தெரியவந்தது.
இந் நிலையில் கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரனை, தூத்துக்குடி போக்சோ கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை ஏப். 2 வரை காவலில் வைக்க நீதிபதி(பொறுப்பு) பிரீத்தா உத்தரவிட்டார். இதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும்
-
மேற்காசிய போர் பதற்றம்; இலங்கையில் 2 வாரங்களில் 2வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு
-
ஈரானும் வாழட்டும்; ஊரானும் வாழட்டும்: 'வழவழ' அறிக்கை வெளியிட்டார் கமல்
-
திமுக கூட்டணிக்கு மேலும் நெருக்கடி; வெளியேறியது தவாக!
-
தொடர் தாக்குதல் எதிரொலி: 24 மணி நேரத்தில் ஈரான் தூதரக ஊழியர்கள் வெளியேற சவுதி உத்தரவு
-
அமெரிக்காவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயார்; கியூபா அதிபர் அறிவிப்பு
-
எல்பிஜி லோடு ஏற்றிய மேலும் ஒரு சரக்கு கப்பல் இந்தியா வந்தது