ரூ.1 லட்சத்திற்கு மேல் பணம் எடுத்தால் தகவல் தெரிவிக்க வங்கிகளுக்கு உத்தரவு
நாமக்கல்:''ஒரு
லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தால், தகவல் தெரி-விக்க வேண்டும்,'' என,
வங்கியாளர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் துர்கா மூர்த்தி
உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், தமிழக
சட்டசபை தேர்-தலை முன்னிட்டு, அனைத்து வங்கியாளர்களுக்கான தேர்தல்
வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்-தது. நாமக்கல்
மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான துர்காமூர்த்தி தலைமை
வகித்து பேசியதாவது:
இந்திய தேர்தல் ஆணையத்தால், தமிழ்நாடு
சட்டசபை தேர்தல் 2026க்கான தேர்தல் நடத்தை விதிமுறைகள்
அமல்படுத்தப்பட்டு, நடைமுறையில் உள்ளது. இதனால், வங்கிகளில் தனி
நபரின் வங்கி கணக்கில் இருந்து, சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில்
பரிவர்த்தனை இருந்தால், அது குறித்து அறிக்கையை தினமும்
வங்கியாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
வங்கி கணக்குகள் உள்ளிட்ட சந்தேகத்திற்குரிய பணபரிமாற்றங்களை,
அனைத்து வங்கிகளின் கிளைகளை சேர்ந்த வங்கியாளர்கள் கண்காணித்து,
தினமும் அறிக்கையை கலெக்-டரின் நேர்முக உதவியாளரிடம் சமர்ப்பிக்க
வேண்டும். குறிப்பாக வங்கியில், ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பணம்
எடுப்போரின் தகவல்களை, வங்கியாளர்கள் தெரிவிக்க வேண்டும்.
அதுபோல்,
ஏ.டி.எம்., மையங்களுக்கு பணம் கொண்டு செல்லும் வாக-னங்களில், உரிய
சான்றுகளுடன் முகவர்களின் முழு தகவல், வாகனங்களின் எண் உள்ளிட்ட
விபரங்களை, மாவட்ட தேர்தல் அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும்.
ஒரே
வங்கிக் கணக்கில் இருந்து, வழக்கத்துக்கு மாறாக பல நபர்களின் வங்கி
கணக்குகளுக்கு பண பரிமாற்றமானது சந்தே-கப்படும் வகையில்
இருந்தாலும், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை
செய்யப்பட்டிருந்தாலும், மகளிர் சுய உதவிக்கு-ழுக்கள் மற்றும் தன்னார்வ
தொண்டு நிறுவனங்களின் கணக்குகளில் நிகழும் அசாதாரண
பணப்பரிமாற்றங்கள் இருந்தால், வருமான வரித்-துறை
ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்ப-டுவர்.
ஆம்புலன்ஸ்
மற்றும் வங்கி வாகனங்கள் தவறாக பயன்படுத்-துவதை தடுக்க,
இ.எஸ்.எம்.எஸ்., செயலி மூலம் உருவாக்கப்-படும், க்யூ.ஆர். கோட்
கட்டாயம் இருக்க வேண்டும். வங்கிக-ளுக்கு தொடர்பில்லாத மூன்றாம்
நபர்களின் பணத்தை, எக்கா-ரணம் கொண்டும் வங்கி வாகனங்களில் கொண்டு
செல்லக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.
டி.ஆர்.ஓ., (சிப்காட்) கண்ணன், தனி தாசில்தார் செல்வராஜ், துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
வளைகுடா போரில் செல்லப்பிராணிகள் கடும் பாதிப்பு; தாயகம் கொண்டுவர இந்தியர்களுக்கு விதிகள் தளர்வு!
-
நேற்று இறக்கம்; இன்று ஏற்றம்; தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரிப்பு
-
ஈரானில் போராட்டக்காரர்கள் 3 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்; மனித உரிமை அமைப்பு கண்டனம்
-
வி.சி.,யில் நாளை முதல் விருப்ப மனு
-
தி.மு.க., அணியில் இருந்து மா.கம்யூ., வெளியேறுகிறதா?
-
விஜயுடன் கூட்டணி அமையுங்கள்: ராமதாசை வலியுறுத்தும் நிர்வாகிகள்