சேந்தமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் உரிமம் பெற்ற துப்பாக்கி ஒப்படைப்பு

சேந்தமங்கலம்:சேந்தமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில், சட்டசபை தேர்த-லையொட்டி, 20க்கும் மேற்பட்டோர் உரிமம் பெற்ற தங்களது துப்பாக்கிகளை, சேந்தமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்ப-டைத்தனர்.


தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்., 23ல் நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த, 15ம் தேதி முதல் அம-லுக்கு வந்துள்ளது. தேர்தலை அமைதியான முறையில் நடத்துவ-தற்கு ஏதுவாக, தமிழகம் முழுவதும் முறையாக உரிமம் பெற்று துப்பாக்கிகளை வைத்திருக்கும் அனைவரும், தேர்தல் முடியும் வரை அவர்கள் வசிக்கும் வீட்டின் அருகே உள்ள, போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்க வேண்டும்.


பின்னர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்புகை சீட்டை பெற்று கொள்ள வேண்டும். தேர்தல் முடிந்த பிறகு ஒப்புகை சீட்டை, போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்து விட்டு துப்பாக்கியை பெற்று கொள்ளலாம். கடந்த மூன்று தினங்களாக, சேந்தமங்கலம் சுற்று வட்டாரத்தில் துப்பாக்கி வைத்திருந்த, 20க்கும் மேற்பட்டோர் சேந்தமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் தங்களது துப்பாக்கியை ஒப்படைத்தனர்.

Advertisement