ராசிபுரத்தில் கொட்டி தீர்த்த கோடை மழையால் மகிழ்ச்சி

நாமக்கல்:தமிழகத்தில், கோடை காலம் துவங்கிய நிலையில், நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மக்களும் வெளியே தலைகாட்ட முடியாமல் வீட்டுக்குள் முடங்கி உள்-ளனர்.


வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை காத்துக் கொள்ள, மக்கள் குடையை கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று அதிகாலை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமழையும், பல இடங்களில் லேசான மழையும் பெய்தது. இந்த திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்-ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை, 6:00 முதல் நேற்று காலை, 6:00 மணி வரை, 24 மணி நேரம் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) விபரம்:

குமாரபாளையம், 4, மங்களபுரம், 26.80, நாமக்கல், 4, புதுச்சத்-திரம், 28, ராசிபுரம், 58.20, சேந்தமங்கலம், 7.40, திருச்செங்கோடு, 11.20, கலெக்டர் அலுவலகம், 1.20, கொல்லிமலை, 2, என மொத்தம், 142.80 மி.மீ., மழை பெய்தது.



ராசிபுரத்தில் கன மழை

ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, மூலப்பள்ளிப்பட்டி, ஆர்.புதுப்பட்டி, ஒடுவன்குறிச்சி, மெட்டாலா மற்றும் மங்கள-புரம் பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு, பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. 1 மணி நேரம் கொட்டி தீர்த்த மழையால் விவசாய நிலங்கள், ஓடைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி-யது.


நாமகிரிப்பேட்டை, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே ஆத்துார் பிரதான சாலையில், மழைநீர் வெளியேற வழியின்றி குட்டை போல் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்-பட்டனர். கோடை மழையை பயன்படுத்திக் கொண்ட மானா-வாரி விவசாயிகள், நிலத்தில் ஈரம் இருக்கும்போதே நேற்று காலை முதல் தங்களது உழவு பணிகளை தொடங்கினர்.


ராசிபு-ரத்தில் அதிகபட்சமாக, 58.20 மி.மீ., மழை பெய்ததால், நிலத்தடி நீர்மட்டம் உயரும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்-ளனர். மழையால் ஒரு சில இடங்களில், மரக்கிளைகள் முறிந்து விழுந்ததோடு மின்தடையும் ஏற்பட்டது.

Advertisement