விஜயுடன் கூட்டணி அமையுங்கள்: ராமதாசை வலியுறுத்தும் நிர்வாகிகள்
சென்னை: “த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டும்,” என, பா.ம.க., நிறுவனர் ராமதாசை, அவரது ஆதரவு நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.
சட்டசபை தேர்தலுக்கான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் முக்கிய நிர்வாகிகளுடன், ராமதாஸ் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.
பல மணி நேரம் நடந்த கூட்டத்தில், 'தி.மு.க., - அ.தி.மு.க.,வுடன் கூட்டணி இல்லை என்பது உறுதியாகி விட்டது. எனவே, அடுத்தகட்ட முயற்சியாக, த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டும்' என ராமதாசை பா.ம.க., நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.
அனைவரின் கருத்துகளையும் கேட்ட ராமதாஸ், 'கட்சியின் எதிர்காலம் கருதி, கூட்டணி குறித்து சிறந்த முடிவை எடுப்பேன்' என கட்சியினரிடம் தெரிவித்து உள்ளார்.
வாசகர் கருத்து (1)
panneer selvam - Dubai,இந்தியா
20 மார்,2026 - 13:51 Report Abuse
It is evident , Vijay does not want alliance with Dr.Ramdoss due to his communal approach . If there is an alliance with PMK , then Vijay knows that he will lose SC votes . Final result is that Dr. Ramdoss is left in lurch . The only person left to Dr. Ramdoss is cash rich Madame Sasikala 0
0
Reply
மேலும்
-
தேர்தல் கமிஷனர் நியமன வழக்கு: தலைமை நீதிபதி விலகல்
-
திராவிட மாடலை பின்பற்றினால் இந்தியா இன்னும் விரைவாக வளரும்: முதல்வர் ஸ்டாலின்
-
விளாத்திகுளம் மாணவி வழக்கில் தர்ம முனீஸ்வரன் தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்; ஏப்ரல் 2 வரை காவல்
-
இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் புரட்சிகர படையின் செய்தி தொடர்பாளர் உயிரிழப்பு
-
காங்கயம் தொகுதியில் புகாரா? மொபைல் போன் எண் அறிவிப்பு
-
தேர்தலில் எப்படி ஓட்டு போடணும்! கல்லுாரியில் மாதிரி ஓட்டுப்பதிவு
Advertisement
Advertisement