தொலைநோக்கு திட்டத்துடன் விரைவில் திமுக தேர்தல் அறிக்கை; முதல்வர் ஸ்டாலின்
சென்னை:''தமிழகம் 2030 எனும் தொலைநோக்கு திட்டத்துடன் திமுக தேர்தல் அறிக்கை வெகு விரைவில் வெளியிடப்படும்'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: தமிழகம் 2030 எனும் தொலைநோக்குத் திட்டத்தின் அடிப்படையிலும், அதனை சிறப்பாகவும் நேர்த்தியாகவும் நிறைவேற்றுகின்ற வகையிலும், கூடுதல் அம்சங்களுடன் 2026 சட்டசபை தேர்தல் களத்திற்கான திமுகவின் தேர்தல் அறிக்கை வெகு விரைவில் வெளியாக இருக்கிறது. எந்தத் தேர்தல் களமாக இருந்தாலும் மக்களின் நம்பிக்கையைப் பெறக்கூடிய தேர்தல் அறிக்கை என்றால் அது திமுகவின் தேர்தல் அறிக்கைதான்.
2021 முதல் 2026 வரையிலான 5 ஆண்டுகளில் இந்தியாவில் எந்த மாநிலமும் செய்ய முடியாத சாதனைத் திட்டங்களையும், இந்தியாவின் பல மாநிலங்கள் பின்பற்றக்கூடிய முதன்மையான திட்டங்களையும் நிறைவேற்றியுள்ள திராவிட மாடல் அரசின் சாதனைகளையும், அதனால் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் கிடைத்துள்ள பயன்களையும், அவர்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும் இடைவிடாது பிரசாரம் செய்யும் பணியை திமுகவினர் ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும்.
இல்லை.. இல்லை..
தமிழகம் VS டில்லி என்பதை முன்வைத்துதான் இந்தத் தேர்தல் களம் என்று நாம் சொல்வதை நிரூபிப்பது போலவே, டில்லியில் இருந்துதான் எல்லாம் முடிவு செய்யப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் டில்லியில் இருப்பது எதற்காக? தமிழகத்திற்கு வழங்கப்படாமல் வஞ்சிக்கப்படும் நிதியை வாங்கித் தருவதற்காகவா? தமிழகத்தில் நிறைவேற்றப்படாமல் முடக்கப்பட்டிருக்கும் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துவதற்காகவா?
மாநில உரிமைகளைக் காப்பாற்றுவதற்காகவா? சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காகவா? இல்லை.. இல்லை.. இல்லவே இல்லை. தமிழகத்தில் உள்ள வீடுகளில் அடுப்பு எரிந்தால் என்ன, எரியாவிட்டால் எங்களுக்கென்ன என்ற மனநிலையுடன்தான் எதிர்க்கட்சியினர் தங்களது கூட்டணிப் பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டிருக்கிறனர்.
அடகு வைக்க...
தேர்தல் களத்தைச் சந்திப்பதற்கே டில்லியின் சம்மதம் வேண்டும் என்ற நிலையில் உள்ளவர்களின் கைகளில் தமிழகம் சிக்கிக்கொண்டால் ஒவ்வொரு நாளும் என்ன பாடுபட வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்துள்ள தமிழ் மக்கள் ஒருபோதும் டில்லியின் ஆதிக்கத்தையும், அதன் அடிமைக் கூட்டத்தையும் அனுமதிக்க மாட்டார்கள். தங்கள் சுயநலனுக்காகச் சொந்தக் கட்சியை அடமானம் வைத்ததுபோல, தமிழகத்தையும், டில்லியிடம் அடகு வைக்கத் தயங்காதவர்கள் அவர்கள் என்பதை மக்கள் அறிவார்கள்.
வெற்றி பெறுவோம்
இனி எதிர்க்கட்சியினர் எடுக்கும் முடிவு என்பது டில்லி எடுக்கும் முடிவுதான் என்பதையும் மக்கள் உணர்ந்தே இருக்கிறார்கள். தமிழகத்தின் உரிமைகளைக் காப்பதற்கும், தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்குமான வலிமை திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கே உண்டு என்பதே மக்களின் உறுதியான நம்பிக்கை. அந்த நம்பிக்கையை உருவாக்கியது திராவிட மாடல் ஆட்சி. அதனால் நாம் மக்களிடம் செல்வோம். களத்தில் நின்று வெற்றியைப் பெறுவோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தொல்லை நோக்கத்துடன் என்று தமிழ் மக்கள் படிப்பார்கள்.
ஏமாற்றுவதற்கு அங்கே இனி ஒன்றுமில்லை. ஏமாற இனி மக்கள் தயாரில்லை விடியல்.
தொலைநோக்கு திட்டம் என்று நீ கிழிச்ச. பொய் பித்தலாட்டத்தின் மொத்த உருவம்.
உங்கள் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிடுவதற்கு முன்பு சென்ற தேர்தலுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் எதையெல்லாம் நிறைவேற்றி உள்ளீர்கள் என்று லிஸ்ட் போட்டு சொன்னால் நன்றாக இருக்கும். 90% நிறைவேற்றி விட்டேன் என்று டுபாக்கூர் பதில் கொடுக்காமல் ஒவ்வொரு வாக்குறுதிக்கு நேராக எதையெல்லாம் நிறைவேற்றி உள்ளீர்கள் என்று டிக் போட்டு காட்டமுடியுமா?
அப்பாவின் உருட்டு , முட்டுக்களை, பைசா ப்ரயோஜனமில்லா அறிக்கைகளை 200 ரூபாய் ஊபிகள்தான் நம்பி மெச்சி மெய் மறந்து ரசிக்கவேண்டும்
ஆமா எல்லா திட்டங்களையும் உலக தரத்தில் செய்து முடிச்சாச்சி .....இப்போ தொலைநோக்கு ....போதும்டா சாமீ நீ முதல்ல கிளம்பு
நேற்று பாட்டியம் அதாவது அமாவாசைக்கு அடுத்த நாள் , ஆகவே இன்று மீண்டும் DMK கூட்டணி பேச்சு வார்த்தை துவக்கம் , DMK கூட்டணியில் இட ஒதுக்கீடு இல்லை , தலைவர் கொடுப்பது வெற்றி கான CERTIFICATE
அடுத்தவர் எழுதிக்கொடுத்த துண்டு சீட்டை படிக்கவே திணறும் இவர், எதையோ எழுதுவதை போல போட்டோ.
தொலைநோக்கு திட்டம்னா, திராவிட மாடல் அகராதியில் என்னங்க அர்த்தம்? டாஸ்மாக் தயாரிப்பு 2 மடங்கு ஆகும். பெண்கள் கலைஞர் உரிமை தொகை 1000/- லிருந்து ௫5௦௦௦/-. பெண்கள் பாலின தொல்லைகள், கஞ்சா சேல்ஸ் இத்யாதிகளை கண்டுகொள்ளாத காவல் துறை . இதுதானே முக்யமந்திரி.
தொகுதி பங்கீட்டைத் தாண்டி, சின்னம் தொடர்பான விவகாரமும் தற்போதைய கூட்டணியில் பெரும் புகைச்சலை ஏற்படுத்த துவங்கிவிட்டது. கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளைத் தங்களது தாமரை சின்னத்தில் போட்டியிட வைத்து, தமிழகத்தில் தனது வாக்கு சதவீதத்தை உயர்த்தி பாஜக விரும்புகிறது..
இப்படி கூடி அப்புறம் ADMK க்கு ஆப்பு வைக்க ஷா திட்டமாம்மேலும்
-
ஹார்முஸ் ஜலசந்தியை பயன்படுத்த ரூ.18.50 கோடி; கட்டணம் வசூலிக்க ஈரான் முடிவு
-
ஈரான் போரில் 16 ராணுவ விமானங்கள், வீரர்கள் 13 பேரை இழந்தது அமெரிக்கா!
-
உலகிற்குத் தேவை நல்லிணக்கமே; போர் அல்ல: மோகன் பாகவத் பேச்சு
-
பாலியல் வழக்கில் தண்டனை; முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸ் சரணடைய விலக்கு
-
மேற்காசிய போர் பதற்றம்; 11 நாடுகளின் வான்வழியைத் தவிர்க்க இந்திய விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்
-
சேலம் அருகே தாறுமாறாக ஓடிய அரசு பஸ் மோதி குழந்தை உட்பட 7 பேர் பலி