சேலம் அருகே தாறுமாறாக ஓடிய அரசு பஸ் மோதி குழந்தை உட்பட 7 பேர் பலி

10

நமது நிருபர்





சேலம் உத்தமசோழபுரம் அருகே அரசு பஸ் மோதிய விபத்தில் குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

சேலம் உத்தமசோழபுரம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. தாறுமாறாக ஓடிய அந்த பஸ், சாலையோரம் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் மற்றும் சரக்கு வாகனம் (டெம்போ) மீது மோதியது. இந்த விபத்தில் பைக்கில் பயணித்த 2 பேர், டெம்போவில் பயணம் செய்த 11 மாத கைக்குழந்தை உட்பட 5 பேர் என மொத்தம் 7 பேர் உயிரிழந்தனர்.


போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையில் தாறுமாறாக ஓடிய அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளான அதிர்ச்சி சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.


@block_P@

இரங்கல்

இது குறித்து தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், ''அரசு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு, உயரிய சிகிச்சை அளிக்க வேண்டும். இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் திமுக அரசை கேட்டுக் கொள்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.block_P

Advertisement