ஹார்முஸ் ஜலசந்தியை பயன்படுத்த ரூ.18.50 கோடி; கட்டணம் வசூலிக்க ஈரான் முடிவு
டெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் எண்ணெய் கப்பல் செல்வதற்கு, ஒவ்வொரு முறையும், ரூ.18.50 கோடி கட்டணம் வசூலிக்க ஈரான் முடிவு செய்துள்ளது.
அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக உலகின் முக்கிய எண்ணெய் வர்த்தக கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளது. இதனால், உலக அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு, பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்த ஹார்முஸ் ஜலசந்தியை கைப்பற்ற வேண்டும் என்று கூறிய அதிபர் டிரம்ப், இதற்காக ஆசியா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.
இந்த நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை நிர்வகித்து வரும் ஈரான், உலகளவில் நிலவும் கச்சா எண்ணெய் பற்றாக்குறையை தனக்கு சாதகமாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. அதாவது, வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய் டேங்கருடன் வரும் சரக்கு கப்பல்கள், ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக பயன்படுத்த, ரூ.18.50 கோடி வரை கட்டணமாக வசூலிக்க ஈரான் பரிசீலித்து வருகிறது.
இது குறித்து ஈரான் எம்பி ஒருவர் கூறுகையில், "எரிபொருள் மற்றும் உணவு விநியோகத்திற்காக ஹார்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்தும் நாடுகள், ஈரானுக்கு கட்டணத்தை செலுத்த வழிவகை செய்யும் மசோதா பற்றி ஈரான் பார்லி பரிசீலித்து வருகிறது, " எனக் கூறினார்.
வளைகுடா நாடுகளின் எண்ணெய் ஏற்றுமதிக்கு உயிர்நாடியாக இருக்கும் ஹார்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்த, ஈரான் கட்டணம் வசூலித்தால், உலகளவில் கச்சா எண்ணெய் விலை மேலும் உயரும்.
நல்ல முடிவு கட்டணம் நியாயமாக இருக்க வேண்டும்
சும்மா இருந்த நாடுகள் இப்ப ஈரானை தக்க தகுந்த காரணம் கிடைத்து விட்டது சரவதேச நீரிணையை ஈரான் கட்டுப்படுத்த நினைப்பதால் அவர்கள் திரும்ப தாக்கலாம் இது கடற்கொள்ளை போன்றது தாக்காமல் இருக்க கட்டணம் ?
நீங்கள் அங்கே உயிரோடு இருந்தால் தானே வரி வசூல் செய்ய!!! இயற்கை வளங்கள் இந்த உலகத்தில் உள்ள எல்லா மக்களுக்கும் சேர்த்து படைத்தவை அதை ஒருகாலமும் தடை செய்ய விட மாட்டார்கள். வீரவசனம் பேசி பட்டது போதாது போல...
தீவிரவாத ஈரான் மீண்டும் தனது ராணுவ கட்டமைப்பை மேம்படுத்த பணம் வேண்டும் தானே. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை ஜாம்பவான்களாக நினைத்து ஏமாந்து போனோமோ?
ஜலசந்தி இயற்கை வரம். ஈரான் உலக மக்கள் இயற்கையை பயன் படுத்த தடை செய்ய முடியாது. ரயில், விமானம் போல் செலவு பிடித்தால் கட்டணம் வசூலிக்கலாம். அமெரிக்கா தீவிரவாதிகளை அழிக்காமல் இயற்கை வளங்கள் மீது தாக்குகிறது. இனி ஈரான் ஆயுத குழுக்கள் தரை வழி தாக்குதல் ஆரம்பித்தால் அமெரிக்கா எதிர் கொள்வது கடினம். ஈரான் தன் பகுதியில் காற்று, மழை, புயலுக்கும் வரி. எட்டி பார்க்க வரி... வரிமேல் வரி போடு மார்க்கமே . தொழில் போட்டியில் உலகம் ஏமாந்து நிற்கிறது. உலகிற்கு ஒரு வழியும் தெரியாது. ஆட்சியாளர்கள் மக்களை கசக்கி வரி வசூல் செய்து ஈரான் தீவிர வாத குழுக்களுக்கு கட்டணம் கட்டுவர். அமெரிக்கா தாக்குதல் பலவீனம் அடைகிறது.
அமெரிக்க மற்றும் இஸ்ரேல் ஒரு விஷயம் சுதாரிக்கவே இல்லை. அமெரிக்கா ஈரான் மீது வான்வெளி தாக்குதல் நடத்துறதுல குறியாக இருந்தது but Iran இந்த இரு நாடுகளும் போருக்காக பயன்படுத்தும் fuel tanker மீது மட்டுமே தாக்குதலை தொடர்ந்தார்கள். இதை America ரொம்ப ரொம்ப late ஆக உணர்ந்ததால் பின்வாங்க நேரிட்டது.மேலும்
-
சென்னை சுங்கத்துறை அணி சீனியர் கால்பந்தில் வெற்றி
-
டிவிஷன் வாலிபால் லீக் ஐ.ஓ.பி., - ஐ.சி.எப்., வெற்றி
-
செங்கையில் பிரசார கூட்டம் நடத்த இடங்கள் அறிவிப்பு
-
செய்யூர் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் மையம் ஏற்படுத்த நோயாளிகள் வலியுறுத்தல்
-
தேர்தல் பணியில் ஈடுபட முன்னாள் வீரர்களுக்கு அழைப்பு
-
இன்று இனிதாக