காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் சேதமான சாலையால் ஆபத்து

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், சேதமான சாலையை ‛பேட்ச் ஒர்க்' பணியாக சீரமைக்க வேண்டும் என, இருசக்கர வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் பே ருந்து நிலை யத்திற்கு தினமும் 1,000க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், மினி பேருந்து நிறுத்தம் அருகில் சாலை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், நடந்து செல்லும் பாதசாரிகளும், இருசக்கர வாகன ஓட்டிகளும், பேருந்தை பிடிக்க ஓடும் பயணியரும் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.

எனவே, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் சேதமடைந்த சாலையை ‛பேட்ச் ஒர்க்' பணியாக சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இருசக்கர வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.



Advertisement