தகராறை தடுத்த பெண் கொலை

மயிலாடுதுறை:மயிலாடுதுறை அருகே தகராறை தடுத்த பெண்ணை தள்ளி கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா ஒழுகைமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் வினோத், 40; இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அவரது தாய் மாமன் பேச்சிமுத்து, 55; என்பவருக்கும் இடத்தகராறில் முன்விரோதம் இருந்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு வினோத்திற்கும் பேச்சிமுத்துவுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது, பேச்சிமுத்து மனைவி அல்லிராணி, 54; விலக்கி விட்டுள்ளார். ஆத்திரமடைந்த வினோத், அல்லிராணியை பிடித்து தள்ளி உள்ளார். தடுமாறி அங்குள்ள சுற்றுச்சுவரில் மோதிய அல்லிராணியின் தலையில் பலத்த அடிபட்டு உயிரிழந்தார்.

புகாரின்பேரில் பொறையார் போலீசார் வழக்கு பதிந்து வினோத்தை கைது செய்தனர்.

Advertisement