ஆள் இல்லாத இடத்தில் தேர்தல் விழிப்புணர்வு

காஞ்சிபுரம்: பொதுமக்கள் ஏராளமானோர் பார்க்க வேண்டிய தேர்தல் விழிப்புணர்வு கோலமிடும் பணியை, கலெக்டர் அலுவலக கட்டடம் பின்புறம் மேற்கொண்டதை பலரும் வேடிக்கையாக பார்த்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், சட்டசபை தேர்தலுக்கான விழிப்புணர்வு பணிகளில், தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில், தேர்தல் விழிப்புணர்வு பேரணியை, கலெக்டர் சினேகா நேற்று துவக்கி வைத்தார். மேலும், கலெக்டர் அலுவலக கட்டடத்தின் பின்புறம், மகளிர் சுய உதவிக்குழுவினர், தேர்தல் விழிப்புணர்வு கோலமிட்டனர்.

தேர்தல் அதிகாரிகளின் வழிகாட்டுதலின் பேரில், கலெக்டர் அலுவலக கட்டடத்தின் பின்புறம் நடந்த இந்த தேர்தல் விழிப்புணர்வு பணியை பொதுமக்கள் வேடிக்கையுடன் பார்த்து சென்றனர். பொதுமக்கள் யாரும் அதிகளவில் வராத இந்த இடத்தில், தேர்தல் விழிப்புணர்வு கோலமிட்டது, பலருக்கும் சிரிப்பலையை ஏற்படுத்தியது. தேர்தல் விழிப்புணர்வு பணிகளை, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மேற்கொள்ள வேண்டும். ஆனால், தேர்தல் அதிகாரிகள் கடமைக்கு இதுபோன்று, கலெக்டர் அலுவலகத்திலேயே விழிப்புணர்வு செய்ய முயல்வதை பலரும் விமர்சித்து வருகின்றனர்.



Advertisement