ராமதாஸ் தலைமையிலான பா.ம.க.,விற்கு தமிழர் மீனவர் கூட்டமைப்பு ஆதரவு
திண்டிவனம்: ராமதாஸ் தலைமையிலான பா.ம.க.,விற்கு ஆதரவு அளிப்பதாக, தமிழர் மீனவர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தலைமையில் செயல்பட்டு வந்த பா.ம.க., இரண்டாக பிளவு பட்டுள்ள நிலையில், ராமதாஸ் அணி, அன்புமணி அணி என வரும் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளது.
தற்போதுள்ள நிலையில், அன்புமணி தரப்பிற்கு கட்சி மற்றும் மாம்பழம் சின்னம் கிடைக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ராமதாஸ் தலைமையிலான பா.ம.க.,விற்கு எந்த கட்சியும் ஆதரவு தராத நிலை நீண்ட நாட்களாக நீடித்து வந்த நிலையில், கடந்த 20ம் தேதி, அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் சசிகலா தைலாபுரம் தோட்டத்தில், ராமதாசை சந்தித்து, வரும் தேர்தலில் புதுச்சேரியிலும் தமிழகத்திலும், இணைந்து போட்டியிடுவதற்கான தேர்தல் ஒப்பந்ததை ஏற்படுத்திக்கொண்டனர்.
இந்நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க.,நிறுவனர் ராமதாசை தமிழர் மீனவர் கூட்டமைப்பு நிறுவனர் தலைவர் வழக்கறிஞர் ரஜினிமகி நேரில் சந்தித்து, வரும் தேர்தலில் ராமதாஸ் அணிக்கு ஆதரவு தருவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'சட்டசபை தேர்தலுக்குப்பின் நடிகர் விஜய் இருக்க மாட்டார். மீனவர் சமுதாய மக்கள் அவருக்கு ஆதரவு தருவது போல வருகின்ற கருத்துக் கணிப்பு எல்லாம் பொய்யானது. ,மீனவர்கள் பிரச்சனைக்கு முதலில் அறிக்கை விடுபவர் ராமதாஸ்தான். மீனவர் மீது பற்று பாசம் காரணமாக புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த ராமதாஸ் என்பவரை பா.ம.க., நிறுவனர், லோக்சபா எம்.பி.,யாக்கினார். கடலோர மாவட்டத்திலுள்ள மீனவர்கள் ராமதாசுக்கு ஆதரவு அளிப்பார்கள்' என்றார்.
மேலும்
-
தமிழர்களின் ஏழ்மை மனப்பான்மை : எழுத்தாளர் அராத்து,
-
எலுமிச்சை கிடைத்தால் வேட்பாளர்: என்.ஆர் காங்கிரசில் அதிசயம்
-
மின்விசிறி, தண்ணீர் பாட்டிலுடன் 'பிரீமியம் ஆட்டோக்கள்' அறிமுகம்
-
'இளம் தலைமுறையினர் அறிவு செல்வம் வளர்க்கும் கடல் தாமரை புத்தக பூங்கா'
-
மெட்ரோ இளஞ்சிவப்பு தடத்தில் விரைவில் ரயில் சேவை துவக்கம்
-
பெங்களூரில் கார் சாகசம் செய்த முத்தப்பா ராய் மகனுக்கு நோட்டீஸ்