கட்டுமான தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட கட்டுமானம், மனைத்தொழில் கூட்டமைப்பு மற்றும் நிலம் மனை முகவர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

விழுப்புரம் தனியார் கூட்டரங்கில் நடந்த கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்து ஆலோசனை வழங்கினார். மாவட்ட செயலாளர்கள் மோகன்ராஜ், செல்வராஜ், அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர்கள் சுரேஷ்குமார், நாதமுனி, இணை செயலாளர்கள் சவுகத்அலி, செய்தி தொடர்பாளர் டேவிட், செயற்குழு உறுப்பினர் சிவக்குமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தில், பட்டா மாறுதலுக்கான பத்திரவு பதிவு பணிகள் தாமதமாகி வருவதை கண்காணித்து துரிதப்படுத்த வேண்டும், பதிவு கட்டணம் செலுத்துவதற்கான குளறுபடிகளை சரி செய்ய வேண்டும். பத்திர பதிவுக்கு பிறகான களப்பணிகள் தாமதம் ஆவதையும் உடனே சரி செய்ய வேண்டும்.

மாவட்டத்தில் கட்டுமானத்திற்கு தொடரும் மணல் தட்டுப்பாட்டை போக்க வேண்டும், கட்டுமான பொருள் விலை ஏற்றத்தை அரசு கட்டுப்படுத்த வேண்டும். கட்டுமான நலவாரிய உறுப்பினர்களுக்கான உதவித்தொகை வழங்காமல் அலை கழிப்பதும், தாமதம் ஆவதையும், அரசும், மாவட்ட நிர்வாகமும் சரிசெய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement