வடாரண்யேஸ்வரர் கோவிலில் 22 ல் பங்குனி உத்திர விழா துவக்கம்
திருவாலங்காடு: திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர விழா நாளை மறுநாள்( மார்ச் 22) கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
திருத்தணி முருகன் கோவிலின் உபக்கோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது. இது, நடராஜபெருமான் நடனம் புரிந்த ஐந்து சபைகளில் முதல் சபையான ரத்தின சபை.
இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் உத்திர விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான பங்குனி உத்திர விழா, நாளை மறுநாள் காலை 8:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
தொடர்ந்து 10 நாட்கள். காலை - மாலை உற்சவர் வடாரண்யேஸ்வரர், வண்டார்குழலி அம்மன் சிங்க வாகனம், சூரிய பிரபை, அன்ன வாகனம், பூத வாகனம், நாக வாகனம், புலி, யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில், திருவாலங்காடின் முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
விழாவின் ஏழாம் நாளான, வரும் 28ம் தேதி தேர் திருவிழா நடைபெற உள்ளது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்து செல்வர் என்பதால், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை, திருத்தணி கோவில் இணை ஆணையர் ரமணி, அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
மேலும்
-
ஆக்கிரமிப்பில் நிழற்குடை பொதுமக்கள் கேள்வி
-
100 சதவீத ஓட்டுப்பதிவே இலக்கு வாக்காளருக்கு விழிப்புணர்வு
-
குவாரிகளில் ஆளுங்கட்சியினர் லஞ்சம்: தேர்தல் அதிகாரியிடம் குற்றச்சாட்டு
-
முறையான தண்ணீர் திறப்பு விவசாயிகள் முறையீடு
-
படம் 3சி தேர்தல் பார்வையாளர் முன்னிலையில் குறைகளை சுட்டிக்காட்டிய கட்சியினர்
-
ஒய்.எப்.ஏ. டிரேடு ஷோ நாளை மாலையுடன் நிறைவு