ரூ.1.63 லட்சம் பறிமுதல்

வேடசந்துார்: ஒட்டன்சத்திரம் ரோடு சேணன்கோட்டையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட தேர்தல் பறக்கும் படையினர் அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். வேடசந்துார் ஜமாலுதீன் ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ.84 ஆயிரத்து 600ஐ பறிமுதல் செய்தனர்.

நத்தம் : அதிகாரிபட்டியில் தேர்தல் பறக்கும் படையினர் திண்டுக்கல் நோக்கி சென்ற காரை சோதனை செய்தனர். சிலுவத்துார்- பெத்தையகவுண்டன்பட்டியை சேர்ந்த தனியார் டாக்டர் சிவசக்தி ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ.78,500ஐ பறிமுதல் செய்தனர்.

Advertisement