ஆடுகள் திருட்டால் பரிதவிக்கும் மக்கள்

வடமதுரை: வடமதுரை, அய்யலுார், கொம்பேறிபட்டி சுற்று கிராமங்களில் ஏராளமானோர் ஆடு வளர்ப்பு தொழில் மூலம் வருமானம் பெற்று வருகின்றனர்.

இதிலும் தொழிற்சாலை வேலைக்கு செல்ல முடியாமல் கடினமான வேலைகளும் செய்ய முடியாமல் ஆடு வளர்ப்பை நம்பி இருப்பவர்களுக்கு தற்போது சிக்கல் அதிகரித்து வருகிறது. ரோட்டோரம் மேய்ச்சலுக்கு விடப்படும், வீட்டில் கட்டி வைத்திருக்கும் ஆடுகள் திருட்டு போகின்றன. கார், டூவீலர்களில் வலம் வரும் திருட்டு கும்பல் சில நொடிகளில் ஆடுகளை திருடி சென்று விடுகின்றனர்.

அய்யலுார் எரியோடு வேப்ப மரப்பிரிவு மேற்கு களத்தை சேர்ந்த பாலசுப்பிரமணி தனது தோட்டத்தில் ஆடுகளை வளர்க்கிறார். இதில் சுவாமி நேர்த்திக்கடனுக்காக வளர்த்த ஆட்டுக்கிடாய் ஒன்றை காரில் வந்த நபர்கள் திருடிச்சென்றனர். இதுபோன்ற திருட்டு சம்பவங்களால் அடிக்கடி நடப்பதால் ஆடு வளர்ப்பை நம்பி உள்ள மக்கள் வேதனையுடன் உள்ளனர்.

Advertisement