பூசாரிகள் உத்தரவிட்டதால் மீண்டும் போட்டியிடுவேன்!

2

@quote@ கடந்த ஐந்தாண்டுகளாக எம்.எல்.ஏ.,வாக பணியாற்ற வாய்ப்பளித்த, சேலம் மேற்கு தொகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறேன்; மீண்டும் தேர்தலில் போட்டியிடலாமா என கருத்து கேட்டேன். அப்போது, சேலம் மேற்கில் மீண்டும் போட்டியிடுமாறு, ஊர் கவுண்டர்கள் மற்றும் கோவில் பூசாரிகள் உத்தரவிட்டுள்ளனர். எனவே, நான் மீண்டும் போட்டியிடுவது, 100 சதவீதம் உறுதி.

யாருடன் கூட்டணி என்பது குறித்து, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் முடிவு செய்வார். சசிகலா கட்சியுடன் கூட்டணியா என்பது குறித்து, எனக்கு தெரியாது. கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என்று, ராமதாசிடம் வலியுறுத்தி வருகிறோம். த.வெ.க., உடன் கூட்டணியா, தனித்துப் போட்டியா என்பதை, காலம் முடிவு செய்யும். ராமதாசுடன் எனக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை. நான், ராமதாசின் உண்மை தொண்டன். எனவே தி.மு.க.,வில் இணைய வேண்டிய அவசியம் இல்லை.

- அருள்,

பா.ம.க., - எம்.எல்.ஏ.,
quote

Advertisement