வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி
தஞ்சாவூர் : நாச்சியார்கோவில் அருகே, வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில், மூதாட்டி நேற்று இறந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், நாச்சியார்கோவில் அருகே செம்மங்குடியை சேர்ந்தவர் நாகவள்ளி, 66. இவர் ஓட்டு வீட்டில் வசித்தார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் முதல் நேற்று அதிகாலை வரை பலத்த மழை பெய்த நிலையில், நாகவள்ளி, நேற்று மதியம் வீட்டின் பின்புறம் சென்றுள்ளார்.
அப்போது, திடீரென பக்கவாட்டு சுவர் இடிந்து, நாகவள்ளி மேல் விழுந்தது, இதில், நாகவள்ளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக, நாச்சியார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேவகோட்டையில் மழை
-
இன்று இனிதாக ... ( 21.03.206) சிவகங்கை
-
மயான இடம் மீட்க போராட்டம் தாசில்தார்கள் ஆய்வு
-
தேர்தல் தோல்வியால் அ.தி.மு.க., உடையும் பழனிசாமி தி.மு.க.,வில் சேரலாம் அமைச்சர் பெரியகருப்பன் ஆரூடம்
-
தேர்தல் பணிக்கு செல்லும் பி.டி.ஓ.க்கள் ஊராட்சி பணிகளில் கடும் பாதிப்பு
-
மதுக்கடை திறக்க கண்டனுாரில் எதிர்ப்பு
Advertisement
Advertisement