தேர்தல் தோல்வியால் அ.தி.மு.க., உடையும் பழனிசாமி தி.மு.க.,வில் சேரலாம் அமைச்சர் பெரியகருப்பன் ஆரூடம்

திருப்புத்துார்: பா.ஜ., தமிழகத்தில் எவ்வழியிலும் நுழைய முடியாத எக்குக்கோட்டையாக தி.மு.க., உள்ளது. தேர்தலில் அ.தி.மு.க., தோல்வியடையும். அப்போது அ.தி.மு.க., சுக்கு நூறாக உடையும். பழனிசாமியும் தி.மு.க.,வில் சேர்ந்தாலும் ஆச்சரியமில்லை என அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் தனியார் மகாலில் நடந்த மாவட்ட செயற்குழு கூட்டத்தில் மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான பெரியகருப்பன் பேசுகையில்,

சிவகங்கை மாவட்டத்திலுள்ள நான்கு தொகுதிகளிலும் தி.மு.க., கூட்டணி வெற்றி பெறுவதற்கு பணியாற்ற வேண்டும். அரசின் ஐந்தாண்டு சாதனைகளை மக்களிடம் சேர்ப்பது நமது கடமை. பா.ஜ.,விற்கு மக்கள் சக்தியும் இல்லை. கூட்டணி வலிமையும் இல்லை. அவர்களுக்கு சி.பி.ஐ, ஐ.டி., இ.டி., ஆகியவற்றுடன்தான் கூட்டணி உள்ளது. அ.தி.மு.க.,வின் நிலையற்றத் தன்மையால் அந்த கட்சி கரைந்து வருகிறது. ஜெ.,வின் விசுவாசியான முன்னாள் முதல்வர் நமது முதல்வரை ஏற்றுக்கொண்டார். கூட்டணிக்கான நமது தலைவரின் செயல்பாடுகள் எதிரிகளும் பாராட்டும் வகையில் உள்ளது.

பா.ஜ., தமிழகத்தில் எவ்வழியிலும் நுழைய முடியாத எக்குக்கோட்டையாக தி.மு.க., உள்ளது. தேர்தலில் அ.தி.மு.க., தோல்வியடையும். அப்போது அ.தி.மு.க., சுக்கு நூறாக உடையும். பழனிசாமியும் தி.மு.க.,வில் சேர்ந்தாலும் ஆச்சரியமில்லை. கட்சிகளை உடைப்பதே பா.ஜ.,வின் வேலையாக உள்ளது. பன்னீர்செல்வம் வருகையால் தென் மாவட்டங்களில் தி.மு.க.,மேலும் வலுவடைந்துள்ளது.

இவ்வாறு பேசினார்.

எம்.எல்.ஏ.,தமிழரசி, மாவட்ட துணைச் செயலாளர் ஜோன்ஸ் ரூசோ, செய்தி தொடர்பு துணை தலைவர் மருது அழகுராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சசிவர்ணம், அசோகன் பேசினர்.

Advertisement