தேர்தல் பணிக்கு செல்லும் பி.டி.ஓ.க்கள் ஊராட்சி பணிகளில் கடும் பாதிப்பு
திருப்புத்துார்:திருப்புத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் கிராம ஊராட்சிக்கான பி.டி.ஓ.,மண்டல பி.டி.ஓ.,க்கள் அன்றாட தேர்தல் பணிக்கு செல்வதால் ஊராட்சிகளில் பணிகள் தேக்கமடைவதாக ஊராட்சி செயலர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
முந்தைய தேர்தல்களில் ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ.க்கள் அன்றாட தேர்தல் பணிக்கு செல்வதில்லை. ஒரு பி.டி.ஓ., மட்டும் தேர்தல் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். தற்போதைய தேர்தலுக்கு திருப்புத்துார் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 2 பி.டி.ஓ.க்களும் தேர்தல் பணிக்காக பறக்கும் படைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஒன்றியத்திலுள்ள 40 ஊராட்சிகளின் அன்றாடப் பராமரிப்பு பணிகளுக்கான நிதி அனுமதியில் தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.
நேற்று முன்தினம் ஆலம்பட்டியில் நுாறுநாள் வேலைத்திட்டத்தில் சாலைப்பணி முழுமையடையாதது குறித்து கிராமத்தினர் நடவடிக்கை கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வந்தனர். அது போல ஆத்தங்கரைப்பட்டியில் ஒரு வாரமாக குடிநீர் வரவில்லை என்று கிராமத்தினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முறையிட்டனர்.ஆனால் அதற்கான அலுவலர் இன்றி பொறியாளர்களிடம் புகார் அளித்தனர்.
ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்,துணைத் தலைவர்கள் இருக்கும் போது அவர்களுக்கு நிதி அனுமதிக்கான உரிமை இருந்தது. தற்போது ஊராட்சிகளுக்கான தனி அலுவலராக பி.டி.ஓ., (கிராம ஊராட்சி) உள்ளார். இவருடன் 10 ஊராட்சிகளுக்கான மண்டல பி.டி.ஓ., அனுமதியும் நிதி ஒதுக்கீடுக்கு அவசியம். இவர்கள் தேர்தல் பணிக்கு செல்வதால் பராமரிப்புப் பணிக்கான அன்றாட செலவினங்களுக்கு நிதி ஒதுக்கீடு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கமான பராமரிப்பு பணிகள் ஊராட்சிகளில் பாதிக்கப்பட துவங்கியுள்ளது.
மேலும்
-
உலக சந்தையில் ஈரானின் கச்சா எண்ணெயை விற்க 30 நாட்களுக்கு அமெரிக்கா அனுமதி
-
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு; இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்
-
இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையம் அருகே தீ விபத்து
-
எமனேஸ்வரம் ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா மார்ச் 28ல் திருக்கல்யாணம்
-
பரமக்குடி சட்டசபை தொகுதியில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு
-
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது