பறக்கும் படை சோதனையில் சிக்கிய 4,450 கிலோ அரிசி
தஞ்சாவூர் : பூதலுார் அருகே தேர்தல் பறக்கும் படையின் வாகன சோதனையில், 4,450 கிலோ ரேஷன் அரிசியும், அதை கடத்திச் சென்ற வாகனமும், பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.
தஞ்சாவூர் மாவட்டத்தில், சட்டசபை தேர்தலுக்காக, மாவட்டம் முழுதும் 72 பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவினர், வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பூதலுார் அருகே விண்ணமங்கலம் பாலம் பகுதியில் நேற்று, தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர், அவ்வழியாக வந்த லோடு வாகனத்தை சோதனை செய்தனர்.
அதில், 89 மூட்டைகளில், 4,450 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. இதையடுத்து, அதிகாரிகள் குடிமை பொருள் குற்ற புலனாய்த்துறை போலீசாருக்கு, அதிகாரிகள் தகவல் அளித்தனர். அதன்படி, பூதலுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், சம்பவ இடம் சென்று விசாரித்தார்.
பூதலுார் பகுதியில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதனை மாவாக அரைத்து கூடுதல் விலைக்கு விற்க, ரேஷன் அரிசியை கடத்தி சென்றது தெரிந்தது. இதையடுத்து, ரேஷன் அரிசி மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்து, கடத்திச் சென்ற வாகன டிவைரை போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
தமிழர்களின் ஏழ்மை மனப்பான்மை : எழுத்தாளர் அராத்து,
-
எலுமிச்சை கிடைத்தால் வேட்பாளர்: என்.ஆர் காங்கிரசில் அதிசயம்
-
மின்விசிறி, தண்ணீர் பாட்டிலுடன் 'பிரீமியம் ஆட்டோக்கள்' அறிமுகம்
-
'இளம் தலைமுறையினர் அறிவு செல்வம் வளர்க்கும் கடல் தாமரை புத்தக பூங்கா'
-
மெட்ரோ இளஞ்சிவப்பு தடத்தில் விரைவில் ரயில் சேவை துவக்கம்
-
பெங்களூரில் கார் சாகசம் செய்த முத்தப்பா ராய் மகனுக்கு நோட்டீஸ்