பெங்களூரில் கார் சாகசம் செய்த முத்தப்பா ராய் மகனுக்கு நோட்டீஸ்
பெங்களூரு: எம்.ஜி., சாலை அனில் கும்ப்ளே சதுக்கத்தில் லம்போர்கினி காரை சாகசம் செய்த முன்னாள் தாதா மறைந்த முத்தப்பா ராய் மகன் ரிக்கி ராயின் காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன், பெங்களூரு எம்.ஜி., சாலையின் அனில் கும்ப்ளே சதுக்கத்தில் அதிகாலை 2:00 மணியளவில் லம்போர்கினி கார் ஒன்று, அதிவேகமாக வந்து 'டிரிப்டிங்' செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இதை கப்பன் பார்க் போக்குவரத்து போலீசார், தாமாக முன்வந்து, வழக்கு பதிவு செய்தனர். கார் டிரிப்டிங் செய்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த, காரின் எண்ணை கண்டுபிடித்தனர். இந்த கார், முன்னாள் தாதா மறைந்த முத்தப்பா ராய் மகன் ரிக்கி ராயின் கார் என்பதை அறிந்தனர்.
அந்த காரை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களின் முதல்கட்ட விசாரணையில், 'அன்றைய தினம் காரை ஓட்டியது ரிக்கி ராய் என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
பொது மக்களை அச்சுறுத்தும் வகையிலும், அஜாக்கிரதையாக ஓட்டியதற்காகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்ய தயாராகி வருகின்றனர்.
மேலும்
-
இளம்பெண் மாயம்: போலீஸ் விசாரணை
-
தேர்தலில் விஜய்க்கு ஈர்ப்பு இருப்பது உண்மைதான்; மா.கம்யூ., பாலகிருஷ்ணன் ஒப்புதல்
-
நாம் எதற்கு இரண்டு ஆயிரம் ரூபாய்க்கு கையேந்த வேண்டும்; பிரசாரத்தில் சீமான் கேள்வி
-
தமிழகத்தை பாதிக்கும்படி தொகுதி வரையறை நடந்தால் சும்மா இருக்க மாட்டோம்; முதல்வர் ஸ்டாலின்
-
அவிநாசி தொகுதியில் எல்.முருகன் ஓட்டுவேட்டை தீவிரம்
-
உண்மை சரி பார்ப்பு குழுவுக்கு அண்ணாமலை அறிவுரை