எலுமிச்சை கிடைத்தால் வேட்பாளர்: என்.ஆர் காங்கிரசில் அதிசயம்
விருப்ப மனு, நேர்காணல், செலவுக்கான பெட்டிகள், இறுதியில் வேட்பாளர்
பட்டியல் என்பதுதான் இப்போது வரை தேர்தல் களத்தில் பின்பற்றப்படும்
நடைமுறை. ஆனால் புதுச்சேரி என்.ஆர்.காங்.,கில், விருப்ப மனுக்கள் எதுவும்
இதுவரை பெறப்பட்டது இல்லை. வேட்பாளர்களுக்கு நேர்காணலும் நடத்தப்பட்டது
கிடையாது. எனில், வேட்பாளர் தேர்வு எப்படி நடக்கிறது?
என்.ஆர்.
காங்., கட்சியின் வேட்பாளர்கள், பூர்த்தி செய்யப்பட்ட வேட்பு மனுக்களுடன்,
முதல்வர் ரங்கசாமியின் வீட்டுக்கு அருகில் அமைந்துள்ள அப்பா பைத்தியம்
சுவாமி கோவிலுக்கு சென்று காத்திருப்பர்.
கோவிலில் பூஜையில்
இருக்கும் ரங்கசாமியிடம், வேட்பு மனு தாக்கலுக்கான விண்ணப்பத்தை
கொடுப்பர். கோவிலின் கருவறைக்குள் சென்று அப்பா பைத்தியம் சுவாமிக்கு,
ரங்கசாமியே நேரடியாக அபிஷேகம், பூஜைகள் நடத்தி, நைவேத்தியத்தை தன் கைகளால்
எடுத்து ஊட்டி விடுவார்.
பின், அப்பா பைத்தியம் சுவாமியிடம் ரங்கசாமி தனியாக பேசிவிட்டு, சுவாமியின் உத்தரவுக்காக காத்திருப்பார். உத்தரவு கிடைத்ததும் கருவறையில் இருந்து வெளியே வரும் ரங்கசாமி, சுவாமி அருள்வாக்கு கூறிய வேட்பாளருக்கு மட்டும் விபூதி பூசி எலுமிச்சம் பழம் தருவார்.
ரங்கசாமி யாருக்கு எலுமிச்சை கொடுக்கிறாரோ அவரே, சம்பந்தப்பட்ட தொகுதியின் என்.ஆர்.காங்., வேட்பாளராவார். என்.ஆர்.காங்., கட்சி ஆரம்பித்த 2011ல் இருந்தே இந்த நடைமுறை தான். இந்த தேர்தலிலும் இப்படித்தான் வேட்பாளர்களுக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (2)
V Rajaraman Iyer - ,இந்தியா
23 மார்,2026 - 08:01 Report Abuse
உண்மை.... பைத்தியம் ஆட்சி நடைபெறுகிறது போல.... திராவிட, கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தின் தோல்வி..... 0
0
Reply
Minimole P C - chennai,இந்தியா
23 மார்,2026 - 03:25 Report Abuse
Nothing wrong in Rengasamis procedure. This world revolves around sentiments. JJ also used to study, the horoscope of candidates and only those have good time and honest to partys head. 0
0
Reply
மேலும்
-
சந்தேகம் இருந்தால் தேர்தல் அலுவலரை அணுகுங்கள்: கலெக்டர் அறிவுரை
-
நெல் பயிர் நிலத்தில் சாய்ந்ததால் மாம்பாக்கத்தில் மகசூல் பாதிப்பு
-
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
-
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்: வெள்ளகுளத்தில் சுகாதார சீர்கேடு
-
சிக்னலில் பசுமை பந்தல் அமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
-
மின்விளக்கின்றி மணிமங்கலம் சாலை விபத்து :அச்சத்தில் வாகன ஓட்டிகள்
Advertisement
Advertisement