மின்விசிறி, தண்ணீர் பாட்டிலுடன் 'பிரீமியம் ஆட்டோக்கள்' அறிமுகம்
பெங்களூரு: பெங்களூரில் மின்விசிறி, தண்ணீர் பாட்டில் வசதியுடன் கூடிய 'பிரீமியம் ஆட்டோ'க்கள் அறிமுகமாகி வருகின்றன.
பெங்களூரில் ஆட்டோக்கள் அதிக எண்ணிக்கையில் இயங்குகின்றன. 'ஓலா', 'ராபிடோ', 'ஊபர்' போன்ற செயலிகள் மூலம் ஆட்டோ ஓட்டுநர்கள் நல்ல வருமானம் பார்க்கின்றனர். தற்போது, நகரில் புதிதாக 'பிரீமியம் ஆட்டோ'க்கள் அறிமுகமாகி உள்ளன. இந்த பிரீமியம் ஆட்டோக்களில் மின்விசிறி, தண்ணீர் பாட்டில், மொபைல் போன் சார்ஜிங் என சில வசதிகள் இடம்பெற்றிருக்கும்.
இந்த வசதிகளை ஆட்டோக்களில் பயணம் செய்யும் பயணியர் உபயோகித்து கொள்ளலாம். இதற்கு கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும். உதாரணமாக, 30 நிமிடம் மின்விசிறி இயங்கினால் 10 முதல் 20 ரூபாய் கட்டணமும்; 500 மில்லி லிட்டர் தண்ணீர் பாட்டிலுக்கு 12 முதல் 15 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும். பெரும்பாலான ஆட்டோக்களில் மொபைல் போனை இலவசமாகவே சார்ஜிங் செய்து கொள்ளலாம்.
இந்த வகை ஆட்டோக்களில் பயணிக்க கூடுதல் கட்டணம் எதுவும் கிடையாது. ஆனால், ஆட்டோவில் உள்ள சேவைகளை உபயோகிக்க தனியாக கட்டணம் வசூலிக்கப்படும். இவ்வகை ஆட்டோக்கள் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களிலும் வெளியாகி வருகின்றன. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. வரும் காலங்களில், அதிகமான எண்ணிக்கையில் பிரீமியம் ஆட்டோக்கள் அறிமுகமாகலாம்.
மேலும்
-
தொகுதி மறுவரையறை சட்ட திருத்தத்தை கொண்டு வந்தால்... 'பழைய தி.மு.க.,வை பார்ப்பீர்கள்!'எச்சரிக்கை விடுத்தார் ஸ்டாலின்
-
எத்தனால் கலப்புதான் சிறந்த தீர்வு 'டி.வி.எஸ்., மோட்டார்' இயக்குநர் கருத்து
-
ஹோண்டாவுடன் கூட்டணி நிஸான் சி.இ.ஓ., விருப்பம்
-
மேற்காசிய போர் எதிரொலி நகை ஏற்றுமதி கடும் சரிவு
-
சென்னைக்கு இரண்டாவது வெற்றி * தொடரும் கொல்கட்டா சோகம்
-
வரலாறு படைத்த வாகன விற்பனை 2025 -- 26ல் 10.40 சதவீதம் அதிகரிப்பு