இளம் பெண் கர்ப்பம் 'போக்சோ'வில் சிக்கிய உறவுக்கார வாலிபர்

திருவாரூர் : இளம் பெண்ணிடம், பாலியல் ரீதியாக, அத்துமீறிய உறவுக்கார வாலிபர் மீது, 'போக்சோ' வழக்கு பதியப்பட்டுள்ளது.


திருவாரூர் நகர் பகுதியைச் சேர்ந்தவர், ஸ்ரீ லட்சுமணன், 22; பழக்கடை பணியாளர். அதே பகுதியைச் சேர்ந்த, இவரது முறைப்பெண், 16 வயது இளம்பெண், பிளஸ் 1 படித்து வருகிறார். இருவரும், மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.இந்நிலையில், ஜனவரி, 15ம் தேதி, திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, இளம் பெண்ணிடம், ஸ்ரீலட்சுமணன் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். தற்போது, இளம் பெண் இரண்டு மாதம் கர்ப்பமாக உள்ளார்.தகவல் அறிந்த, திருவாரூர் அனைத்து மகளிர் போலீசார், ஸ்ரீலட்சுமணன் மீது, போக்சோ வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement