ராணிப்பேட்டை, ஆற்காடு தொகுதியில் வேஷ்டி - சேலைகள் பறிமுதல்
ஆற்காடு : ராணிப்பேட்டை , ஆற்காடு தொகுதிகளில் ஓட்டாளர்களுக்கு வழங்கப்பட இருந்த வேஷ்டி, சேலைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தொகுதியில் ஓட்டாளர்களுக்கு அரசியல் கட்சியினர் பரிசு பொருட்கள் வழங்கப்படுவதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு புகார்கள் வந்தது. அதன்படி ஆற்காடு தொகுதி பறக்கும் படையினர், நேற்று முன்தினம் இரவு வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை அருகே வாகன சோதனை நடத்தினர். சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு லோடு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ய முயன்றபோது, திடீரென வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பறக்கும் படை சோதனை செய்வதை பார்த்தவுடன் 78,000 ரூபாய் மதிப்புள்ள 3 மூட்டைவேஷ்டி, சேலைகளை அதே இடத்தில் வீசிவிட்டு, தாங்கள் வந்த வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
வேஷ்டி,சேலைகள் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஆற்காடு தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும் தப்பிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், கலவை பேரூராட்சி பகுதியில், 67,000 ரூபாய் மதிப்பிலான வேஷ்டி,சேலைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை தேர்தல் அலுவலர் வசந்த் தலைமையிலான பறக்கும் படையினர் பறிமுதல் செய்து ஆற்காடு தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
மேலும், ராணிப்பேட்டை பெல் குடியிருப்பு பகுதிகளிலும் பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய வைத்திருந்த வேஷ்டி, சேலைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும்
-
உலக சந்தையில் ஈரானின் கச்சா எண்ணெயை விற்க 30 நாட்களுக்கு அமெரிக்கா அனுமதி
-
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு; இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்
-
இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையம் அருகே தீ விபத்து
-
எமனேஸ்வரம் ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா மார்ச் 28ல் திருக்கல்யாணம்
-
பரமக்குடி சட்டசபை தொகுதியில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு
-
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது