உலக சந்தையில் ஈரானின் கச்சா எண்ணெயை விற்க 30 நாட்களுக்கு அமெரிக்கா அனுமதி
நமது நிருபர்
உலக சந்தையில் ஈரானின் கச்சா எண்ணெயை விற்பனை செய்ய 30 நாட்களுக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போரினால் உயர்ந்துள்ள எண்ணெய் விலைகளைக் குறைக்கும் முயற்சியாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், கடல் வழியாக ஈரானின் கச்சா எண்ணெயைக் கொள்முதல் செய்வதற்கான தடைகளை 30 நாட்களுக்குத் தளர்த்தியது. அமெரிக்கா அனுமதியால் கப்பல்களில் உள்ள 14 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது.
இது குறித்து அமெரிக்க கருவூலச் செயலாளர் பெசென்ட் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: உலகளாவிய பயங்கரவாதத்தின் தலையாக ஈரான் விளங்குகிறது. அதிபர் டிரம்பின் 'ஆபரேஷன் எபிக் பியூரி' நடவடிக்கை மூலம், நாம் எதிர்பார்த்ததை விடவும் மிக வேகமாக இந்த முக்கியமான போராட்டத்தில் வெற்றி பெற்று வருகிறோம்.
உலகளாவிய எரிசக்தி உள்கட்டமைப்புக்கு எதிரான ஈரானின் பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, உலகிற்கான எரிசக்தி விநியோகத்தை அதிகரிக்கவும், உலகளாவிய விநியோகத்தை வலுப்படுத்தவும், சந்தை நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும் டிரம்ப் நிர்வாகம் அமெரிக்காவின் பொருளாதார மற்றும் ராணுவ வலிமையைத் தொடர்ந்து பயன்படுத்தும்.
தற்போது கடலில் தேங்கியுள்ள ஈரானின் எண்ணெயை விற்பனை செய்ய அனுமதிக்கும், குறுகிய கால அங்கீகாரத்தை வழங்கியது. உலகிற்கான இந்த தற்போதைய விநியோகத்தால், 14 கோடி பீப்பாய் கச்சாய் எண்ணெயை உலகச் சந்தைகளுக்கு விரைவாகக் கொண்டு வரும். இதுவரை, டிரம்ப் நிர்வாகம் 440 மில்லியன் கூடுதல் பீப்பாய் எண்ணெயை உலகச் சந்தைக்குக் கொண்டுவரப் பணியாற்றி வருகிறது. அதிபர் டிரம்பின் எரிசக்தி ஆதரவுத் திட்டம், அமெரிக்க எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை உயர்த்தியுள்ளது.
இது எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தி, எரிபொருள் செலவுகளையும் குறைத்துள்ளது. இப்போது ஏற்படும் எந்தவொரு குறுகிய கால இடையூறும் இறுதியில் அமெரிக்கர்களுக்கு நீண்ட காலப் பொருளாதார ஆதாயங்களாக மாறும். இவ்வாறு பெசென்ட் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (23)
Rajasekar Jayaraman - ,
21 மார்,2026 - 17:51 Report Abuse
வெட்கமில்லாத ஜென்மங்கள் உங்கள் அனுமதியை யார் எதிர்பார்க்கிறார்கள் வாய்க்கொழுப்பு அதிகம் அது விரைவில் அடங்கும். 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
21 மார்,2026 - 14:22 Report Abuse
அமெரிக்கா என்ன அனுமதி கொடுப்பதற்கும், அனுமதி மறுப்பதற்கும்? அமெரிக்கா உலகின் நாட்டாமையா... தீர்ப்பு சொல்ல? டிரம்ப் அதிபர் பதவியில் தொடர்ந்தால், அழிவு முதலில் அமெரிக்காவுக்கு. பிறகு மற்ற உலக நாடுகளுக்கு. 0
0
Senthoora - Sydney,இந்தியா
21 மார்,2026 - 17:08Report Abuse
என்ன உங்க மனசு தடம் மாருதே 0
0
Reply
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
21 மார்,2026 - 14:22 Report Abuse
நம்ம பப்பு எதுக்கு அமேரிக்கா அனுமதின்னு இப்ப வரை கேக்கலியே. ஏன் ஏன் ஏன்? 0
0
Reply
Pandi Muni - Johur,இந்தியா
21 மார்,2026 - 13:43 Report Abuse
அமெரிக்கன் டாலரை ஓய்க்காதவரைக்கும் நீங்க வாங்கிக்கலாம் நீங்க வித்துக்கலாம்னு கட்ட பஞ்சாயத்து பண்ணிக்கிட்டுதான் இருப்பார்கள். அடுத்து நியூயார்க்கு மேல எவனோ அணுகுண்ட வீசப்போறார் 0
0
Reply
SUBRAMANIAN P - chennai,இந்தியா
21 மார்,2026 - 13:17 Report Abuse
இன்னும் கொஞ்சநாள் போனா ஈரானுக்கு போகக்கூட ட்ரம்ப் தான் அனுமதி கொடுக்கணும். அதுக்குள்ள இவனைக்காலி பண்ணுங்க. 0
0
Reply
Vijay D Ratnam - Chennai,இந்தியா
21 மார்,2026 - 12:28 Report Abuse
ட்ரம்ப் அவர்களே, உளுந்தூர்பேட்டை பஸ்டாண்ட் கக்கூஸ்ல தண்ணி வரல, அதுக்கு ஒரு அனுமதி கொடுங்க. 0
0
Chinnappan Arulappan - ,இந்தியா
21 மார்,2026 - 13:09Report Abuse
இது நல்லாருக்கு 0
0
Reply
KOVAIKARAN - COIMBATORE,இந்தியா
21 மார்,2026 - 12:15 Report Abuse
இங்கே கருத்து கூறியவர்கள் ஒன்றை மறந்து விட்டார்கள் போலும். ஈரான் பயங்கரவாதத்தில் ஈடுபட்டுள்ளதாலும், அணுகுண்டு தயாரிக்கிறது என்று அமெரிக்காவும் மற்ற உலக நாடுகளும் இந்திய உட்பட நம்புவதால், அமெரிக்கா ஈரானுக்கு பொருளாதார தடை விதித்துள்ளது. கடந்த இருபது வருடங்களுக்கு மேல் இது உள்ளது. எனவே ஈரானால் அவர்களது எண்ணையை உலக நாடுகளுக்கு விற்பனை செய்ய முடிவதில்லை. நமது இந்திய நாடு ஈரானுடனும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனும் நல்லுறவு கொண்டுள்ளதால் கூட ஈரானிடமிருந்து சொற்பளவே வாங்குகிறது. நமது இந்திய நாடு எண்ணெய் வாங்குவதெல்லாம், ரஷ்யா, அமெரிக்கா மற்றும் மற்ற வளைகுடா நாடுகளிடமிருந்து தான். சீனாவிற்குக்கூட ஈரான் தனது எண்ணையை கள்ளத்தனமாகவே அனுப்பிவந்துள்ளது என்பது சமீபத்திய நிகழ்வுகளால் தெரிய வந்துள்ளது. ஈரான் சம்பாதிக்கும் வருமானத்தில் பெரும்பாலான வருமானம் எல்லாம், ராணுவத்திற்கும், அணுகுண்டு மற்றும் ஆயுதங்கள் செய்வதற்கும், வாங்குவதற்கும் தான் செலவு செய்கிறார்கள். இவ்வாறு பொருளாதாரத் தடைகளினால் ஈரானின் பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டு அங்குள்ள மக்கள் வறுமையில் வாடி அங்கே அவ்வப்போது போராட்டமும் நடத்தினார்கள். இப்போது அந்தப் பொருளாதாரத் தடையை அமெரிக்கா சற்று தளர்த்தி, உலக சந்தையில் ஈரானின் கச்சா எண்ணெயை விற்க 30 நாட்களுக்கு அமெரிக்கா அனுமதி கொடுத்துள்ளது ஏனென்றால் அவ்வாறு அனுமதித்தால்தான் ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியில் மாட்டிக்கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான கப்பல்களை விடுவித்து, அவைகள் செல்ல இருக்கும் நாடுகளுக்குச் செல்ல முடியும். இல்லையென்றால், ஈரானும் இப்போது வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் படைத்த் தளங்களை மட்டுமல்லாமல், அந்த நாடுகளிலுள்ள எண்ணைய்க்கிணறுகள், கிடங்குகள், எரிவாயு கிடங்குகள் இப்போது தாக்கிக்கொண்டிருப்பது கொஞ்சம் குறையும். அமெரிக்காவும் அவர்களுடைய மிகப்பபெரிய போர்க்கப்பலை இப்போது அரபிக் கடலுக்கு அனுப்பி உள்ளது. இதுவே இன்றைய எதார்த்தமான நிலைமை. 0
0
Reply
SUBBU,MADURAI - ,
21 மார்,2026 - 12:09 Report Abuse
Two more LPG tankers are transiting the Strait of Hormuz under Indian Navy protection. Two Indian naval task forces have been deployed to escort India bound vessels, ensuring the safe passage of crude oil and gas shipments bound to India amid rising tensions. 0
0
Reply
Vasan - ,இந்தியா
21 மார்,2026 - 10:57 Report Abuse
ஐயா டிரம்ப் அவர்களே, அனுமதி தாருங்கள், ப்ளீஸ். 0
0
Reply
Seruvai - ,இந்தியா
21 மார்,2026 - 10:48 Report Abuse
கடைசியில் சரண்டர் ஆகி விட்டார்ர்ர்ர்ரைய்யா நம்ம டிரம்பர்... அய்யோ பாவம்.. 0
0
Reply
மேலும் 11 கருத்துக்கள்...
மேலும்
-
தாய், மகளை திட்டிய வாலிபர் கைது
-
மோட்டார் திருடிய சகோதரர்கள் கைது
-
பள்ளி வாசல்களில் ரம்ஜான் தொழுகை
-
உடைகிறது திமுக கூட்டணி; தனித்துப்போட்டியிட மார்க்சிஸ்ட் தயார்!
-
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பா.ஜ., வேட்பாளர் பட்டியல் வெளியீடு
-
புதுச்சேரியில் ஏப்ரல் 4, 5 தேதிகளில் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி: அனைத்து கல்வி சந்தேகங்களையும் தீர்த்து கொள்ள அரிய வாய்ப்பு
Advertisement
Advertisement