பேச்சு, பேட்டி, அறிக்கை
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: சமையல் காஸ் சிலிண்டர்
தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் பொருட்டு, தி.மு.க., அரசு அறிவித்துள்ள,
யூனிட்டிற்கு இரண்டு ரூபாய் மின் கட்டண சலுகை, காஸ் சிலிண்டருக்கு பதில்,
மின்சார அடுப்பை பயன்படுத்தினால் மட்டுமே கிடைக்கும். சொம்பு ஒன்றை
கொடுத்து, இதில் பாலை கறந்து கொள்ளுங்கள் என்றால், பயனாளிகள் குடும்பம்,
கறவை மாட்டுக்கு எங்கே போகும். அரசு அளித்த சலுகையை அனுபவிப்பதற்கு,
மின்சார அடுப்பு வேண்டுமே. தேர்தல் நேரத்தில், மக்களுக்கு பல பரிசுகளை
குடுக்கிற ஆளுங்கட்சியினர், இந்த முறை மின்சார அடுப்புகளை கொடுக்க
ஆரம்பிச்சுடுவாங்க பாருங்க!
ராமதாஸ் அணி பா.ம.க., - எம்.எல்.ஏ., அருள் பேட்டி: பா.ம.க., கட்சி மற்றும் சின்னம் குறித்து நாங்கள் சட்ட போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால், நாங்கள் ஒன்று செய்தால், அன்புமணி தரப்பினர், 10 செய்து இடைஞ்சல் கொடுத்து கலைத்து விடுகின்றனர். இறுதியில் தர்மம்தான் வெல்லும். சேலம் மேற்கு தொகுதியில் நான் போட்டியிடுவது உறுதி; வெற்றி பெறுவதும் உறுதி. தொகுதி மக்கள் என்னை என்றும் புறக்கணிக்க மாட்டார்கள்.
கூட்டணியே இல்லாமல், தனித்து போட்டியிட்டு ஜெயிக்கும் திறன் இவருக்கு இருக்கா?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் பேச்சு: தமிழகத்தின் கடன் சுமை, 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது. தி.மு.க., தனது, 'ஆக்டோபஸ்' கரங்களால் அனைத்து துறைகளையும் வளைத்து கொள்ளை அடித்து கொண்டிருக்கிறது. கடலுார் மாவட்ட அமைச்சர் பன்னீர்செல்வம், தனது சுயநலத்திற்காக, கடலுார் பஸ் நிலையத்தை, அவரது குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு மாற்றுகிறார். மக்கள் நலனை கருத்தில் கொள்ளாத தி.மு.க., ஆட்சி அகற்றப்பட வேண்டும்.
குறிஞ்சிப்பாடி மக்கள், 'தொகுதிக்கு என்ன செஞ்சீங்க'ன்னு கேட்டுடக் கூடாதே என, பஸ் நிலையத்தை அங்க மாத்தியிருப்பாரோ?
அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வும், அ.ம.மு.க., திருச்சி வடக்கு மாவட்ட செயலருமான ராஜசேகரன் பேச்சு: அமைச்சர் நேருவுக்கு, 500 ஏக்கர் நிலம் இருக்கு. அதுக்கு நடுவுல, லால்குடியில பஸ் ஸ்டாண்ட் கட்டிட்டார். அப்பதான், தன் நிலங்களை, 'டெவலப்மென்ட்' பண்ணலாம்னு நினைக்கிறார். வரும் தேர்தலில், திருச்சியில் யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள்; தி.மு.க.,வுக்கு மட்டும் போட்டு விடாதீர்கள். நேருவுக்கு ஓட்டு போட்டால், திருச்சி மாநகரமே அழிந்ததாக அர்த்தம்.
'நேருவுக்கு ஓட்டு போட்டால், 500 ஏக்கர் 1,000 ஏக்கரா அதிகரிச்சிடும்'னு சொல்ல வர்றாரோ?
மேலும்
-
பியூஷ் கோயல் தமிழக பயணம் ரத்து ஏன்: நயினார் நாகேந்திரன் பதில்
-
அமைதியை விரும்புவோருக்கே ஆதரவளிப்பேன்: தெளிவுபடுத்திய சசி தரூர்
-
போராடி தொகுதியை பெற்றாக வேண்டும்; 25 ஆண்டுகளை கடந்து வந்தாலும் இந்த களம் புதிது என்கிறார் திருமா
-
தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.2,640 குறைவு
-
உலக சந்தையில் ஈரானின் கச்சா எண்ணெயை விற்க 30 நாட்களுக்கு அமெரிக்கா அனுமதி
-
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு; இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்