56 காஸ் சிலிண்டர்கள் சீர்காழி அருகே பறிமுதல்
மயிலாடுதுறை:ரசீது இல்லாமல் கொண்டுவரப்பட்ட 56 காஸ் சிலிண்டர்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் புறவழிச் சாலையில் நேற்று இரவு தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மயிலாடுதுறை நோக்கி சென்ற லோடு வேனை நிறுத்தி சோதனை நடத்தியதில் உரிய ரசீது இல்லாமல் வணிக பயன்பாட்டிற்கான 56 காஸ் சிலிண்டர்களை ஏற்றிச் சென்றது தெரியவந்தது. அதையடுத்து, தேர்தல் பறக்கும் படையினரால் சிலிண்டர்களுடன் வந்த லோடு வேனை பறிமுதல் செய்து சீர்காழி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஐ.ஏ.எஸ்., தேர்வில் தேர்ச்சி பெற்ற மவுண்ட்பார்க் பள்ளி முன்னாள் மாணவருக்கு பாராட்டு
-
சிறுமியிடம் சில்மிஷம் வாலிபர் மீது போக்சோ
-
மீன் பிடிக்க வழியின்றி மீனவர்கள் வாழ்வாதாரம்.. கேள்விக்குறி ! மணல் திட்டுகளால் பாழாகும் பழவேற்காடு ஏரி
-
தேர்தல் கெடுபிடியால் பட்டு சேலை விற்பனை...படுமந்தம்! கோடிக்கணக்கான ரூபாய் வியாபாரம் பாதிப்பு
-
செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,000 ஏரி, குளங்கள்..அழிவின் விளிம்பில்! தரிசு நிலங்களாக மாறி வருவதால் விவசாயிகள் வேதனை
-
ஓ.எம்.ஆரில் ரூ.1,500 கோடியில் குடிநீர் பணி முடிந்தும்..பயனில்லை! கம்பி நீட்டிய' நிறுவனங்களால் குடியிருப்புகளுக்கு சிக்கல்
Advertisement
Advertisement