தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.2,640 குறைவு
சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 21) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2,640 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 330 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 13,620 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
சர்வதேச முதலீட்டாளர்கள், தங்கத்தில் முதலீடு செய்வதை குறைத்துள்ளனர். இதனால், நம் நாட்டில் அதன் விலை குறைந்து வந்தது. நேற்று தங்கம் விலை சற்று உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் சரிந்துள்ளது. தமிழகத்தில் நேற்று முன்தினம் ஆபரண தங்கம், கிராம் 13,900 ரூபாய்க்கும், சவரன் 1,11,200 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 265 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்றைய நிலவரம்
நேற்று (மார்ச் 20) தங்கம் விலை கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து, 13,950 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து, 1,11,600 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, 260 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு 5,000 ரூபாய் சரிவடைந்து, 2.60 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இன்றைய நிலவரம்
இந்நிலையில் இன்று (மார்ச் 21) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2,640 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராமுக்கு 330 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 13,620 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்த நிலையில் இன்று 2,640 ரூபாய் குறைந்துள்ளது.
வெள்ளியும் சரிவு
வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு கிலோ 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.
ஏறியது இறங்கியே ஆகவேண்டும். இப்படி கன்னாபின்னாவென்று விலை ஏறினால் யார் வாங்குவார்கள்.மேலும்
-
டவுன் சிண்ட்ரோம் தின விழா
-
தேர்தலுக்கு தயாராகும் விழிப்புணர்வு வாகனம்
-
கட்டுமான தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
-
சுவர் விளம்பரங்கள் எழுதுவதில் அ.தி.மு.க.,வினரிடையே போட்டி
-
ராமதாஸ் தலைமையிலான பா.ம.க.,விற்கு தமிழர் மீனவர் கூட்டமைப்பு ஆதரவு
-
முதல்வர் முதல் அதிகாரிகள் வரை 6 மாதங்களுக்கு சம்பளம் 'கட்': ஹிமாச்சல் அரசு திடீர் முடிவு