பியூஷ் கோயல் தமிழக பயணம் ரத்து ஏன்: நயினார் நாகேந்திரன் பதில்

16


சென்னை: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தமிழக வருகை ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணம் குறித்து தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். அவர் தேஜ கூட்டணியில் குழப்பங்கள் ஏதுமில்லை என்றார்.

சென்னையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தமிழக வருகை ஒத்திவைப்பட்டதற்கு ஏதும் காரணம் இருக்கிறதா என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ''ஒரு காரணமும் கிடையாது. அவர்களுக்கு பிரதமர் மீட்டிங் நாளை இருக்கிறது. அதனால் நாளை இரவு அல்லது நாளை மறுதினம் கூட பியூஷ் கோயல் தமிழகம் வரலாம்'' என நயினார் நாகேந்திரன் பதில் அளித்தார்.

குழப்பங்கள் இல்லை!




கூட்டணி கட்சி தலைவர்கள் எல்லாம் டில்லிக்கு சென்று இருக்கிறார்கள். கூட்டணியில் ஏதும் குழப்பங்கள் இருக்கிறதா என்று சந்தேகம் இருக்கிறது என்ற கேள்விக்கு, ''குழப்பங்கள் ஏதுமில்லை.

எல்லாம் நல்லபடியாக நடக்கும். மத்திய அமைச்சர் வந்த உடன் எல்லாம் பேசி முடித்துவிடுவோம்'' என நயினார் நாகேந்திரன் கூறி புறப்பட்டு சென்றார்.

Advertisement