கூடுதல் தொகுதி கேட்டு திமுக கூட்டணியில் போர்க்கொடி: போட்டுடைத்தார் திருமா
சென்னை: ''போராடி தொகுதியை பெற்றாக வேண்டும். போராடி நிதியை திரட்ட வேண்டும். 25 ஆண்டுகளை கடந்து வந்தாலும் கூட இந்த களம் இன்னும் நமக்கு புதிதாகத்தான் இருக்கிறது'' என விடுதலை சிறுத்தைக்கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விசிக தொண்டர்களுக்கு வீடியோ கான்பரன்சிங் வாயிலாக திருமாவளவன் பேசியதாவது: மிக குறைவான எண்ணிக்கையை நாம் பெற்றாலும் கூட அது, நம்முடைய அரசியல் உறுதிப்பாட்டை மேலும் உறுதிப்படுத்துவதாக அமையும் என்ற நம்பிக்கையுடன் தேர்தலுக்கு தயாராகுவோம். போராடி தொகுதியை பெற்றாக வேண்டும். போராடி நிதியை திரட்ட வேண்டும். நெருக்கடி இடையில் வேட்பாளர்களை தேர்வு செய்யக்கூடிய பணிச்சுமைகள் இருக்கிறது.
நான் இவ்வளவு வெளிப்படையாக தெரிவிக்கக் காரணம், 25 ஆண்டுகளை கடந்து வந்தாலும் கூட இந்த களம் இன்னும் நமக்கு புதிதாகத்தான் இருக்கிறது. இன்னும் அதற்கு நாம் நம்மை தகவமைத்துக் கொள்ளவில்லை சமூகச் சூழலும் நமக்கு ஏதுவாக அமையவில்லை. நாம் எந்த வகையிலும் வலிமை பெற்றுவிடக்கூடாது என்று கருதுகிறவர்களின் எண்ணிக்கைதான் பெரும்பான்மை. அரசியல் சக்தியாக பரிணமிக்கக்கூடாது என்று எண்ணுகிறவர்கள்தான் இங்கு பெரும்பான்மை.
ஜனநாயக கடமை
இவர்கள் வளர்வதற்கோ, வாழ்த்துவதற்கோ, ஊக்கப்படுத்துவதற்கோ பெரிதாக யாரும் இல்லை என்பதுதான் உண்மை. ஆனாலும் தேர்தல் அரசியல் களத்தில் 25 ஆண்டு காலம் தாக்குப்பிடித்திருக்கிறோம்; தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக களமாடுகிறோம்; சமூக ஊடகங்களில் திருமாவளவன் கேம் சேஞ்சர்.
திருமாவளவன் நினைத்தால் தமிழக அரசியலில் திசையை ஒரு சில நிமிடங்களில் திருப்பிப்போட்டுவிட முடியும்; மாற்றிவிட முடியும் என்றெல்லாம் கட்சி சார்பற்ற தோழர்கள் நமக்கு தொடர்பே இல்லாத ஜனநாயக சக்திகள் பேசுவதை கேட்டிருப்பீர்கள். ஆனாலும் கூட அப்படிப்பட்ட அரசியலை நாங்கள் செய்ய விரும்பாமல், ஒரு நாகரிகமான அரசியல் மரபை நாம் கடைப்பிடிக்கிறோம்.
விருப்பமனு
தொகுதி பங்கீடு உள்ளிட்ட நடவடிக்கைகளில் நாம் பெருந்தன்மையாக நடந்து கொள்கிறோம். இது தற்காலிகமாக வெற்றிகரமான அணுகுமுறை இல்லை என்று தோன்றினாலும் கூட காலத்திற்கும் போற்றக்கூடிய வெற்றிகரமான உத்தி என்பதை காலம் உணர்த்தும். எத்தனை தொகுதிகளை பெற்றாலும், அது நமது எதிர்காலத்துடன் தொடர்புடையது. இன்றைக்கு நம்பகத்தன்மையை இழந்து பெறும் வெற்றி விரைவில் நீர்த்து போகும்.
மக்கள் மத்தியில் உள்ள நம்பகத்தன்மையை பாதுகாப்பது தான் உண்மையான வெற்றி. வலதுசாரி மதவாத சக்திகள் இடமிருந்து பாதுகாப்பது தான் நமது முதன்மையான கடமை. நாம் குறைவான எண்ணிக்கைகள் பெற்று போட்டியிட்டாலும் கூட தமிழகம் முழுவதும் விருப்பமனு பெறுதல் என்பது ஜனநாயக கடமை. அதனை கடைப்பிடித்து வருகிறோம். எந்தெந்த தொகுதிகளில் இருந்து யார், யார் போட்டியிட விரும்புகிறவர்களை இதன் மூலம் அறிய முடியும்.
நன்மதிப்பு
ஏராளமான தொகுதி அல்லது 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக இருந்தால், விருப்பமனு பெற்று நேர்காணல் நடத்தி வேட்பாளர்களை தேர்வு செய்யலாம். நாம் திமுக கூட்டணியில் இருக்கிறோம், 23 கட்சிகள் அங்கம் வகிக்கிற கட்சியில் இருக்கிறோம், நாம் போட்டியிடக் கூடிய தொகுதிகளின் எண்ணிக்கை குறைவுதான் என்பது அனைவரும் அறிந்த உண்மை என்றாலும் கூட, இந்த தொகுதிகளை கேளுங்கள் என அம்மாவட்டப் பொறுப்பாளர்கள் கேட்பதாக விருப்பமனு அமையும்.
அரசியலை பாதுகாப்பதும், அந்த அரசியலை வழிநடத்துகின்ற விடுதலை சிறுத்தைகளின் வலிமையை தக்கவைப்பதும்தான் முதன்மையானது என்கிற அடிப்படையில்தான் நாம் பலதரப்பட்ட மக்களிடம் நன்மதிப்பை பெற்றிருக்கிறோம். அதனை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் அதுதான் அரசியல் வெற்றி. இவ்வாறு திருமாவளவன் பேசினார்.
@block_G@
இது குறித்து நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:
போயஸ் தோட்டத்தை பாஜ கட்சியினர் தேடி வந்த காலம் மாறி, இன்று டில்லிக்கு அதிமுகவினர் தேடிச்செல்லும் நிலை உருவாகியிருக்கிறது. முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்.,ஐ பெரிதும் மதிப்பவன் என்பவன் என்ற முறையில் என் கவலையை பகிர்ந்து கொள்கிறேன்.
கடந்த தேர்தலில் திமுக தனிப்பட்ட முறையில் 173 இடங்களில் போட்டியிட்டது. இந்த முறை அவர்களும் குறைந்த தொகுதியில் போட்டியிடுவதாகவும், நீங்களும் தொகுதிகளை விட்டுக்கொடுங்கள் என்றும் எங்களிடம் சொல்கின்றனர். கால தாமதம் ஏற்பட்டாலும் சுமுகமான தீர்வு எட்டப்படும். நாங்களும் உள்ளுக்குள் போர்க்கொடி தான் துாக்கியிருக்கிறோம். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.
block_G
சோறா? சொரணையா? ம்ஹூம் சோறுதான் நமக்கு முக்கியம்.
ஒரு அரசியல் இயக்கத்துக்கான எந்த தகுதியும் அறிவும் இல்லனா இப்படித்தான் இருக்கும்.. ரவுடிகளும், பொறுக்கிகளும் கட்டப்பஞ்சாயத்து செய்யுறவங்களும் சேர்ந்த கூட்டுத்தான் இந்த அமைப்பு.. மக்கள் நலனில் அக்கறை உள்ள அமைப்புதான் நல்ல அரசியல் இயக்கமாக மாறும்.. விசிக என்றுமே அப்படி மாற வாய்ப்பு இல்லை.. அது ஒரு கட்டப்பஞ்சாயத்து இயக்கம் மட்டுமே.. வரலாறு அப்படிதான் சொல்லுகிறது. அடுத்து திருமாவுக்கு இன்பநிதியோடு அரசியல் செய்யவேண்டும் என்றும் இருக்கிறது.
ஆமா. ஒரு தராதரம் வேணுமே. முகஸ் கிட்ட அரசியல் பண்ணலாம். பரவாயில்லை.ஆனா அவுரோட பாலிடால் பையனோட அரசியல் பண்ற மாதிரி ஆயிட்டுதே. எப்ப பாலிடாலை து மு ம ன்னு சொன்னாய்ங்களோ அப்பவே துண்டைக்காணோம் துணியை காணோம் ன்னு மூட்டை மூடிச்சோட கிளம்பி சிதம்பரத்துக்கு போயிருக்க வாணாமா? உன்னோட வயசு என்னா பாலிடாலோட வயசு என்னா? அசிங்கமா இருக்கு குமாரு..
என்ன பேச்சு இது. கமல் மொழி போல் ஒன்றுமே புரியாமல் சுற்றி வளைத்து உள்ளது.
சும்மா நெனச்சா போதுமாம். தமிழக அரசியலின் திசையை சில நிமிடங்களில் திருப்பி போட்டுட முடியுமாம். தமிழ்நாட்டு அரசியல் என்ன தோளில் போடுகிற துண்டா. ஒரு தோளில் இருந்து எடுத்து மறுதோளில் மாத்தி போடுவதற்கு. ஒடஞ்ச பிளாஸ்டிக் சேரை வேண்டாம்னு சொல்லி நல்ல பிளாஸ்டிக் சேர்தான் தரணும்னு கேட்கக்கூட தைரியம் இல்லை. இதுல வெட்டி வீராப்பு பேச்சுக்கு ஒண்ணும் கொறச்சல் இல்லை.
நீல கட்சி நடந்துகொள்ளும் விதம் ரவுடிகளை போல தெரு பொறுக்கிகளை போல உள்ளது என்று மக்கள் நினைக்கிறார்கள். மனித தன்மையற்ற மனிதர்களாக உலவுவதை விட்டு விட்டு உண்மையான சமூக நீதிக்காக போராடினால் இந்த புலம்பும் நிலை இருக்காது. சீர்காழியில் போலீஸ் ஸ்டேஷனில் புகுந்து அடிதத்ததஆகட்டும், வேங்கை வயலில் செய்த அரசியல் ஆகட்டும், கள்ளக்குறிச்சி கள்ள சாராயம் சாவாகட்டும் எதிலாவது உண்மையான மக்களை நலனை நினைத்து போராடவில்லை என்று மக்கள் சொல்லுகிறார்கள்.
திமுக்காரன் கூட சேர்ந்து சுலபமாக பொருக்கித்தனம் அனைத்தையும் செய்து தனது இன இளைய சமுதாய மக்களை ஏமாற்றிய இந்து என்று சொல்லி ஓட்டு வாங்கிய அயோக்கிய மதமாறிக்கு அழிவு நிச்சயம்
இவரல்லாம் வாழும் போது ஏன் நாம் வாழ கூடாதுன்னு தோணும் அடிக்கடி
வி சி க போன்ற ஜாதி காட்சிகள், மத வசித்த காட்சிகள், துண்டு துக்கடா காட்சிகள் நாட்டுக்கு கேடு. வளர விட்டதே டி எம் கே தான் . .நோட்டாவுக்கே மக்கள் வாக்குமேலும்
-
'டார்ச் லைட்'டில் போட்டியா? கமலின் குழப்பமான விளக்கம்
-
திருப்பூர் நிறுவனங்களுக்கு சி.என்.ஜி. இணைப்பு; ஏற்றுமதியாளர்களிடம் தமிழக அரசு உறுதி
-
தி.மு.க., மீது மக்கள் கோபம்; வீட்டுக்கு அனுப்ப காத்திருக்கின்றனர்; மத்திய அமைச்சர் எல்.முருகன்
-
தேர்தலுக்கான வாகன ஏற்பாடு: ஆர்.டி.ஓ. நியமிக்காததால் சிக்கல்
-
தாய், குழந்தையை கடத்தி ஆபாச புகைப்படம் எடுத்து மிரட்டிய திமுக நிர்வாகி; அண்ணாமலை கண்டனம்
-
தேர்தல் நடவடிக்கை மேற்பார்வையாளர் ஆய்வு