அகில இந்திய செஸ் தொடர் சென்னை பல்கலைகள் அபாரம்
சென்னை: உத்தர பிரதேசத்தில் நடந்த பல்கலைகளுக்கு இடையிலான செஸ் தொடரில், சென்னை பல்கலை அணி தங்கப்பதக்கம் வென்று அசத்தியது; எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியது.
உத்தர பிரதேசம் மாநிலம் மீரட்டில், ஐ.ஐ.எம்.டி., பல்கலை சார்பில், அகில இந்திய பல்கலைகளுக்கு இடையிலான செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. பல மாநிலங்களில் இருந்து, 15 அணிகள் போட்டியிட்டன; 'சுவிஸ்' முறையில் நடந்தன.
இதன் மகளிர் இறுதிப்போட்டிகள் நேற்று நடைபெற்றன. முடிவில் தமிழகம் சார்பில் போட்டியிட்ட, சென்னை மாவட்ட பல்கலை அணிகள், முதல் இரண்டு இடங்களை பிடித்து அசத்தின.
முறையே 17.5 புள்ளிகள் பெற்ற சென்னை பல்கலை அணி தங்கப் பதக்கத்தையும், 14.5 புள்ளிகளுடன் சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி இரண்டாவது இடத்தை வென்று, வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பொம்மை முக்கியமில்லை; நூல் யாரிடம் என்பது தான் முக்கியம்; சொல்கிறார் சிதம்பரம்
-
புதுச்சேரியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
-
மேற்காசியாவில் 22வது நாளாக நீடிக்கும் மோதல்; போர் நிறுத்த கோரிக்கையை நிராகரித்தது ஈரான்
-
பியூஷ் கோயல் தமிழக பயணம் ரத்து ஏன்: நயினார் நாகேந்திரன் பதில்
-
அமைதியை விரும்புவோருக்கே ஆதரவளிப்பேன்: தெளிவுபடுத்திய சசி தரூர்
-
போராடி தொகுதியை பெற்றாக வேண்டும்; 25 ஆண்டுகளை கடந்து வந்தாலும் இந்த களம் புதிது என்கிறார் திருமா
Advertisement
Advertisement