புதுச்சேரியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

5

நமது நிருபர்




புதுச்சேரியில் 10 தொகுதிகளில் பாஜ போட்டியிட உள்ள நிலையில், 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

புதுச்சேரி சட்டசபை தேர்தல், அடுத்த மாதம் ஏப்ரல் 9ம் தேதி நடக்க உள்ளது. தே.ஜ., கூட்டணியில், லட்சிய ஜனநாயக கட்சியை சேர்த்துக் கொள்ள முதல்வர் ரங்கசாமி ஒப்புக் கொண்டதை தொடர்ந்து, கடந்த ஒரு வாரமாக நிலவி வந்த கடும் இழுபறிக்கு பிறகு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. என்ஆர் காங்கிரஸ் 16, பாஜ 10, அதிமுக 2 லஜக 2 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

இந்நிலையில் இன்று (மார்ச் 21) 9 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜ வெளியிட்டது. அதன் விபரம் பின்வருமாறு:

* மண்ணடிப்பட்டு- நவச்சிவாயம்

* ஒசுடு- தீப்பாய்ந்தான்

* காலாப்பட்டு- கல்யாணசுந்தரம்

* முதலியார் பேட்டை- ஜான்குமார்

* திருநள்ளாறு- ராஜசேகரன்

* மாஹே- தினேஷன்

* ராஜ்பவன்- ராமலிங்கம்

* மணவேளி- ஏம்பலம்

* நிரவி- மீனாட்சி சுந்தரம்

Advertisement