மேற்காசியாவில் 22வது நாளாக நீடிக்கும் மோதல்; போர் நிறுத்த கோரிக்கையை நிராகரித்தது ஈரான்
டெஹ்ரான்: போர் நிறுத்த கோரிக்கையை ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி நிராகரித்தார். அவர் போரினால் ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு இழப்பீடு கோரியுள்ளார்.
மேற்காசிய நாடான ஈரான் மீது, அணுசக்தி அச்சுறுத்தலை காரணம் காட்டி அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து கடந்த 28ம் தேதி போரை துவக்கின. இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மற்றும் தன் அண்டை நாடுகளில் உள்ள எரிவாயு நிலையங்கள் மற்றும் மேற்காசிய பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான்-அமெரிக்கா, இஸ்ரேல் போர் முடிவுக்கு வரும் என அதிபர் டிரம்ப் சூசகமாக தெரிவித்து இருந்தார்.
அவர் கூறுகையில், ''எங்களது நோக்கங்கள் நிறைவேறும் தருவாயில் உள்ளதால் மத்திய கிழக்கில் ராணுவ நடவடிக்கைகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். தற்போது, ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி போர் நிறுத்த கோரிக்கையை நிராகரித்தார். அவர் கூறியதாவது:
உத்தரவாதங்கள் மற்றும் இழப்பீடுகளுடன் போர் நிரந்தரமாக முடிவடையும் வரை ஈரான் தன்னைத் தற்காத்துக் கொள்ளும். போர் நிறுத்தத்தை ஈரான் ஏற்காது. கடந்த ஆண்டு நிலைமை மீண்டும் ஏற்பட ஈரான் விரும்பவில்லை. இந்தப் போரை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய எந்தவொரு முயற்சியையும் நாங்கள் வரவேற்கிறோம்; கோரிக்கைகளை கேட்கவும், பரிசீலிக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.
தற்போது, சில நாடுகள் ஒரு தீர்வைக் காண முயற்சிக்கும் வேளையில், அமெரிக்கா தனது ஆக்கிரமிப்பை நிறுத்தத் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, நாங்கள் தொடர்ந்து எங்களைப் பாதுகாத்துக் கொள்வோம். போர் தொடர்பான எந்தவொரு முடிவும் முழுமையானதாகவும் நிரந்தரமானதாகவும் இருக்க வேண்டும்.
இது போன்ற ஒரு மோதல் மீண்டும் நிகழாது என்பதற்கான உத்தரவாதங்கள் அளிக்கப்பட வேண்டும். ஈரானுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அப்பாஸ் அராக்சி கூறினார்.
திமிர் பிடித்த ஆட்சியாளர்கள் தாங்கள் முழுதும் அழியும் வரை அடங்க மாட்டார்கள்
அமெரிக்கா israle மீது பகை காரணமாக மொத உலகையும் பழி வாங்குகிறது ஈரான். என்னை கிணறுகள் நீர் நிலை அமைப்புகள் என்று எல்லாவற்றையும் அழிக்கிறார்கள். இன்னும் ஒரு பத்தாண்டுகளுக்கு ஒரு பெரிய சிக்கலை எல்லாநாடுகளும் சந்திக்க போகின்றன. இப்போது உலகம் முழுதும் உள்ள சுற்றுலா தளங்கள் ஹோட்டல்களை தாக்குவோம் என்று சொல்கிறார்கள். பைத்தியம் பிடித்து விட்டது. உலக வெறுப்பை சம்பாதித்து கொண்டுவிட்டார்கள்.
ஹமாஸ் ஹிஸ்புல்லா மூலமாக இஸ்ரேலில் நடத்தப்பட்ட அழிவுகளுக்கு ஈரான் நஷ்டஈடு கொடுக்குமா? ஈரான் போன்ற பயங்கரவாத நாடுகள் உலக வரைபடத்திலேயே இருக்கக் கூடாது.
கார்க் தீவு , ஹர்முஸ் ஜலசந்தி இனி அமெரிக்காவின் கையில்.
இரான் ஒரு மாதிரி மக்களை சீரழிக்கிறார்கள் ..இங்கே மாடல் அரசு மது மற்றும் போதை கலாச்சாரத்தால் அழிக்கிறது
எல்லாம் நல்லதுக்கே இரண்டு கெட்டவர்கள் அடித்து கொள்ளும் பொழுது
இருவரும் வெயிலில் உடல் உழைப்பு இல்லாமல் ஏசி ரூமில் இருப்பதால் இவ்வளவு நக்கல்
நாள் முழுக்க குனிந்து நிமிர்ந்து முதுகு ஒடிய இடுப்பு வலிக்க வியர்வை சிந்தி வேலை பார்த்திருந்தால் இரு நாட்டு பிரதமர்களுக்கும் உழைப்பின் மதிப்பும் உயிரின் மதிப்பும் கடுகளவேணும் தெரிந்து இருக்கும்
வினாச காலே விபரீத புத்தி. ஈரானின் தீவிரவாத ஆட்சி அழிவை நெருங்கிக் கொண்டு இருக்கிறது.மேலும்
-
தோல்வியின் விரக்தியில் இருக்கிறார் இபிஎஸ்: நடைபயிற்சியின் போது ஓட்டு சேகரித்த முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
'பூத் சிலிப்' வழங்கும் பணி கலெக்டர் துவக்கி வைப்பு
-
தேர்தலுக்கு இன்னும் 11 நாட்கள் தான்; அரசியல் கள பரபரப்பு செய்திகளுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சு தோல்வி
-
அமைச்சர்கள் மட்டுமல்ல; மனைவியரும் கோடீஸ்வரர்கள்
-
தலைமைச் செயலாளர் மாற்றம்; டில்லியில் நடந்தது என்ன?