அம்பேத்கர் சிலை விவகாரம் தாசில்தார் முடிவெடுக்க உத்தரவு
சென்னை: இ.சி.ஆர்., தனியார் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலையை அகற்றக் கோரி அளிக்கப்பட்ட மனுவை பரிசீலித்து, உரிய உத்தரவை பிறப்பிக்க, சோழிங்கநல்லுார் தாசில்தாருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த முத்து அம்பிகை என்பவர் தாக்கல் செய்த மனு:
கொட்டிவாக்கத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆதி திராவிடர் பள்ளி வளாகத்தில், அம்பேத்கரின் மார்ப்பளவு சிலை நிறுவப்பட்டிருந்தது.
இ.சி.ஆர்., நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் காரணமாக, பள்ளிக்கு எதிரே உள்ள என்னுடைய பட்டா நிலத்தில், எந்த அனுமதியும் பெறாமல், அந்த சிலை மாற்றிய அமைக்கப்பட்டது.
இதனால், சில அரசியல் கட்சியினர் குறிப்பிட்ட நாட்களில் சிலைக்கு மரியாதை செலுத்துவதற்காக என் வீட்டின் முன் அதிகளவில் திரள்வதால் எங்களுக்கு இடையூறாக இருக்கிறது. இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதி பி.டி.ஆஷா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர் முத்தமிழ் செல்வகுமார் ஆஜராகி, ''நெடுஞ்சாலை விரிவாக்க பணி முடிந்தவுடன், தங்களுடைய பட்டா நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலை, பள்ளி வளாகத்திலேயே மீண்டும் நிறுவப்படும் என பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை சிலை மாற்றி அமைக்கப்படவில்லை,'' என தெரிவித்தார்.
இதை பதிவு செய்த நீதிபதி, அம்பேத்கரின் மார்பளவுச் சிலை பள்ளி வளாகத்திற்குள்ளேயே ஆரம்பத்தில் இருந்தது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். எனவே மனுதாரரின் மனுவை பரிசீலினை செய்து, மூன்று வாரத்தில் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க, சோழிங்கநல்லுார் தாசில்தாருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.2,640 குறைவு
-
உலக சந்தையில் ஈரானின் கச்சா எண்ணெயை விற்க 30 நாட்களுக்கு அமெரிக்கா அனுமதி
-
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு; இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்
-
இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையம் அருகே தீ விபத்து
-
எமனேஸ்வரம் ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா மார்ச் 28ல் திருக்கல்யாணம்
-
பரமக்குடி சட்டசபை தொகுதியில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு