குண்டர் சட்டத்தில் இருவர் கைது

செங்கல்பட்டு: மதுராந்தகம் சூரக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார், 27, செங்குந்தர்பேட்டை வண்ணாங்குளக்கரை தெருவைச் சேர்ந்த சரண், 22, ஆகியோர், மதுராந்தகம் பகுதியில், திருட்டு, வழிபறி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பங்க ளில் ஈடுபட்டு வந்தனர்.

இதுகுறித்து, மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்து, கடந்த பிப்., மாதம், சிறையில் அடைத்தனர். இரு வர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, மாவட்ட கலெக்டருக்கு, எஸ்.பி., அய்மன் ஜ மால் பரிந்துரை செய்தார்.

வினோத்குமார் , சரண் ஆகியோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, கலெக்டர் மாலதி ெஹலன், உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.

Advertisement