தேர்தல் பணியில் ஈடுபட முன்னாள் வீரர்களுக்கு அழைப்பு
செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில், சட்டசபை தேர்தலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட ஓய்வு பெற்ற ராணுவத்தினர், போலீசாருக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி., அய்மன் ஜமால் வெளியிட்ட அறிக்கை;
தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் ஏப்., 23ம் தேதி, சட்டசபை தேர்தல் நடக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில், சோழிங்கநல்லுார், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம் ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன.
தேர்தல் பாதுகாப்பு ப ணியில் ஈடுபட விருப்பமுள்ள, ஒய்வுபெற்ற ராணுவத்தினர், காவல் துறையினர், வனத்துறையினர், தீயணைப்பு பாதுகாப்பு படையினர், சிறைத்துறையினர் ஆகியோர், தங்களது விருப்ப மனுவை நேரடியாக, செங்கல்பட்டு மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும், தேர்தல் கட்டுப்பாட்டு பிரிவில் வழங்கலாம்.
மேலும், சப் - இன்ஸ்பெக்டர்கள் சதாசிவம் மொபைல் எண்; 98945 99625, நிர்மல்குமார் மொபைல் எண் 95854 11840 ஆகியோர் எண்களை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
டவுன் சிண்ட்ரோம் தின விழா
-
தேர்தலுக்கு தயாராகும் விழிப்புணர்வு வாகனம்
-
கட்டுமான தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
-
சுவர் விளம்பரங்கள் எழுதுவதில் அ.தி.மு.க.,வினரிடையே போட்டி
-
ராமதாஸ் தலைமையிலான பா.ம.க.,விற்கு தமிழர் மீனவர் கூட்டமைப்பு ஆதரவு
-
முதல்வர் முதல் அதிகாரிகள் வரை 6 மாதங்களுக்கு சம்பளம் 'கட்': ஹிமாச்சல் அரசு திடீர் முடிவு