டிவிஷன் வாலிபால் லீக் ஐ.ஓ.பி., - ஐ.சி.எப்., வெற்றி

சென்னை: டிவிசன் வாலிபால் போட்டியில், ஐ.ஓ.பி., - ஐ.சி.எப்., அணிகள் வெற்றி பெற்றன.

சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில், ஆண்களுக்கான டிவிசன் 'ஏ' வாலிபால் போட்டிகள், எழும்பூரில் நடக்கின்றன.

நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் போட்டியில், ஐ.ஓ.பி., மற்றும் டி.ஜி.வைஷ்ணவா அணிகள் மோதின. விறுவிறுப்பான போட்டியில், டி.ஜி.வைஷ்ணவா செய்த சிறு தவறுகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திய ஐ.ஓ.பி., அணி 25 - 23, 25 - 20, 25 - 23 என்ற கணக்கில், போராடி வெற்றி பெற்றது.

மற்றொரு போட்டியில் ஐ.சி.எப்., மற்றும் அக்னி பிரண்ட்ஸ் கிளப் அணிகள் மோதின. முதல் செட்டில் கடும் போட்டி நிலவிய நிலையில், போட்டி 23 - 23 என சமநிலையில் முடிந்தது. சுதாரித்த ஐ.சி.எப்., அணி அடுத்த இரு செட்களிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, 25 - 20, 25 - 15 என்ற கணக்கில் வெற்றி பெற்றது; போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.

Advertisement